மீண்டும் ஹீரோயின் ஆகிய ஓவர் திமிரால் துரத்தியடிக்கப்பட்ட நடிகை.! யார் நடிகர் தெரியுமா…?

Re-entry Actress Bhanu AKA Muktha: நடிகை பானு கடந்த 2007ஆம் ஆண்டில் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தாமிரபரணி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

கடைசியாக சந்தானம், ஆர்யா, தமன்னா ஆகியோர்கள் இணைந்து நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க திரைப்படத்தில் சந்தானத்தின் மனைவியாக பானு நடித்திருந்தார்.  இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சினை ஏற்படுத்தியது சினிமாவிற்கு வந்த புதிதில் தொடர்ந்து முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்ததை பார்த்து பலரும் மனவேதனை அடைந்தனர்.

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

இவ்வாறு தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என எதிர்பார்க்கப்பட்டது ஏனென்றால் குஷ்பூ போலவே கொழுக்கு மொழுகு என இருக்கும் இவர்தான் சினிமாவில் அடுத்த குஷ்பு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் இவர் பல போட்ட கண்டிஷன்கள் போட்டதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

அதனால் சில விளம்பர படங்களில் மட்டுமே அவ்வப்பொழுது நடித்து வந்தார். தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த பானு அங்கும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இப்பொழுது ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.

கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

அந்த வகையில் குருவி பாப்பா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் இப்படத்தில் ஹீரோவாக வினித் நடித்து வருகிறார். வினித்துக்கு ஜோடியாகவும் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு பெற்றோராகவும் நடித்திருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது இப்படத்திற்கு பிறகு பானு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது