ராமராஜன் இயக்குனராக ஹிட் கொடுத்த படங்கள் இத்தனையா.? லிஸ்ட் பெருசா போகுது

80, 90 கால கட்டத்தில் திரை உலகில் உச்சத்தில் இருந்தவர்  நடிகர் ராமராஜன் ஒரு நடிகராக தான் நமக்கு தெரியும் ஆனால் அவர் உண்மையில் ஒரு சிறந்த இயக்குனரும் கூட.. ராமராஜன் முதலில் “சிவப்பு மல்லி” படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே “மண்ணுக்கேத்த பொண்ணு” என்னும் படத்தை இயக்கினார் இந்த படத்தில் பாண்டியன், இளவரசி மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது.

2 மணி நேரமே தியேட்டர்ல உட்கார முடியாது.. இதில் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்த 5 திரைப்படங்கள்..

அதன் பிறகு திரை உலகில் ராமராஜன் இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார் அது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. மீண்டும் நடிகர் பாண்டியனை வைத்து மருதாணி  மற்றும் ஹலோ யார் பேசுறது போன்ற படங்கள் சுமாராக ஓடின. 1886 ல் மறக்கமாட்டேன், சோலை புஷ்பங்கள் போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை..

இருந்தாலும் இயக்குனராக தொடர்ந்து வந்தார் “ஒன்று எங்கள் ஜாதியே” படம் சுமாராக ஓடியது. 1996 ஆம் ஆண்டு அம்மன் கோவில் வாசலிலே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தவர். அடுத்து நம்ம ஊரு ராசா, கோபுர தீபம், விவசாயி மகன் தொடர்ச்சியாக இயக்குனர் 2001 ஆம் ஆண்டு அவருக்கு கடைசி படமாக அமைந்தது.

யார் வீட்டில பார்ட்டி எங்க வீட்ல பார்ட்டி. வனிதா வீட்டில் ஒன்று கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள்..

கடைசியாக மேதை படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி படங்களில் நடிக்கிறாரே தவிர இயக்கவில்லை. கைவசம் சாமானியன் மற்றும் ஒரு புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.