2 மணி நேரமே தியேட்டர்ல உட்கார முடியாது.. இதில் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்த 5 திரைப்படங்கள்..

Top 5 Tamil Movies: 3 மணி நேரத்திற்கு மேல் ஓடி ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற டாப் 5 தமிழ் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாக மூன்று மணி நேரத்தை கடந்தால் ரசிகர்கள் போரிங் என சொல்வது வழக்கம் ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்களே மெய் மறந்து பார்க்க வைத்த படங்களும் உள்ளது.

5. தசாவதாரம்: கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் தசாவதாரம். இந்த படத்தில் அசின், ஜெய பிரபா, நெப்போலியன், எம்.எஸ் பாஸ்கர், இயக்குனர் வாசு, ரமேஷ் கண்ணா என ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்தனர். இப்படம் 3 மணி நேரம் 5 நிமிடம் இதில் கமல்ஹாசனின் நடிப்பு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

கேப்டனிடமே பண மோசடி செய்ய பார்த்த நபர்.. கழுத்தை பிடித்து ஒரே தூக்காக தூக்கிய விஜயகாந்த்..

4. தவமாய் தவமிருந்து: சேரன் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான தவமாய் தவமிருந்து படத்தில் சேரன், ராம்கிரண், சரண்யா, செந்தில் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்தனர். அனைவருடைய நடிப்பும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்த நிலையில் 3 மணி நேரம் ஓடிய இந்த படம் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

3. நண்பன்: ஷங்கர் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு விஜய், ஜீவா, இலியானா, ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றடு திரைப்படம் தான் நண்பன். இப்படம் 3 மணி 8 நிமிடங்கள் நீளமாக இருந்தாலும் நேரம் போவதே தெரியாத அளவிற்கு கலகலப்பாக அமைந்தது.

அந்நியன்: சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் தான் அந்நியன் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சதா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மேலும் பலரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இப்படத்தின் நிமிடம் 3 மணி நேரம் 1 நிமிடம் இப்படத்தில் விக்ரமின் நடிப்பு ரசிகர்களை கவர தரமான படமாக அமைந்தது.

உனக்கென்ன பைத்தியமா.. போயும் போயும் ரஜினியை ஹீரோன்னு சொல்ற… சூப்பர் ஸ்டாரையே வெறுத்த தயாரிப்பாளர்.. பின்பு நடந்ததுதான் அதிசயம்..

சிவாஜி: 2007ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக், சுமன், நயன்தாரா, ரகுவரன் போன்றவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படத்தினை சங்கர் இயக்க பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மேலும் சிவாஜி படம் 3 மணி நேரம் 5 நிமிடங்களுடன் வெளியாகி கமர்சியல் படமாக போரடிக்காமல் அமைந்தது.