தலைவர் 172 : ரஜினிக்கு கதை சொல்லப் போன இயக்குனர்.? இந்த கூட்டணி உறுதியாகும்.?

Thalaiver 172: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது மேலும் பிரபல இயக்குனர் ரஜினிகாந்தை சந்தித்திருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக சினிமாவில் மாஸ் காட்டி வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது.

அமைதியாக இருந்து காரியத்தை சாதித்த மகா.. ஹாஸ்பிடலில் ஐஸ்வர்யாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அந்த வகையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார். இந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது.

அதன்படி பொங்கல் பண்டிகை ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 26ஆம் தேதியில் லால் சலாம் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து லைகா தயாரிப்பில் தாசெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ் ஆபீஸராக நடித்து வருகிறார். இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வேட்டையன் டைட்டிலுடன் மினி டீசரும் வெளியாகி மாஸ் காட்டியது.

வேட்டையன் படம் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171வது படத்தில் ரஜினி இணைய  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஆக்சன் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.

விஜயுடன் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடிக்க முடியாமல் போன 5 நடிகைகள்.! பழனிக்கே பால்குடம் எடுத்தாலும் இனி அது நடக்காது..

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் சந்தித்துள்ளார் அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரன், சண்டக்கோழி, பீமா, பையா என சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் லிங்குசாமி தலைவர் 172வது படத்தினை இயக்க போகிறாரா என கேள்வி எழும்பியுள்ளது. எனவே விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.