விஜயுடன் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடிக்க முடியாமல் போன 5 நடிகைகள்.! பழனிக்கே பால்குடம் எடுத்தாலும் இனி அது நடக்காது..

5 actresses who acted with Vijay but could not act with Ajith : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் விஜய்யுடன் நடிக்க முன்னணி நடிகைகளை தவமாய் தவம் இருக்கிறார்கள். ஆனால் நடிகர் விஜய் உடன் நடித்துவிட்டு அஜித் கூட நடிக்க முடியாமல் போன ஐந்து நடிகைகளை பற்றி இங்கே காணலாம்.

அதேபோல் இந்த ஐந்து நடிகைகளும் இனிமேல் அஜித் கூட நடிக்க முடியும் என்பதற்கு வாய்ப்பு ரொம்பவும் கம்மி தான் அந்த லிஸ்டில் யார் யார் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை இங்கே காணலாம்.

ஜெனிலியா : 

நடிகை ஜெனிலியா தளபதி விஜயுடன் சச்சின் வேலாயுதம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் ஆனால் இவர் இதுவரைக்கும் தல அஜித்துடன் நடித்ததே கிடையாது இனிமேலும் நடிப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஏனென்றால் அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஸ்ரேயா : 

நடிகை ஸ்ரேயா தளபதி விஜய் உடன் மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் அவர்களுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனாலும் இவர் தல அஜித் கூட மட்டும் இதுவரை நடித்தது கிடையாது அதேபோல் தல அஜித்துடன் நடிப்பதற்கு மிகவும் இன்ட்ரஸ்ட் ஆக இருந்தார் ஆனால் இவர் பட வாய்ப்பு குறைந்ததால் காமெடி நடிகருடன் இணைந்து குத்தாட்டம் போட்டதால் இவரின் கேரியர் அதோடு முடிந்துவிட்டது.

ஹன்சிகா மோத்வானி : 

தளபதி விஜயுடன் ஹன்சிகா வேலாயுதம் மற்றும் புலி திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படி விஜயுடன் நடித்திருந்தாலும் கடைசி வரை அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை அதேபோல் இவருக்கு திருமணமும் ஆகிவிட்டது இதன் பிறகு தல அஜித்துடன் நடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது எனக் கூறுகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்: 

கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பைரவா, சர்க்கார் ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் கீர்த்தி சுரேஷ் இதுவரை அஜித் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. இனிமேலும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சமந்தா : 

நடிகை சமந்தா தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் விஜயுடன் மெர்சல், கத்தி, தெறி என மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல் சமந்தாவுக்கும் இனிமேல் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் அப்படியே கிடைத்து நடித்தால் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி விஜயுடன் நடித்து அஜித்துடன் நடிக்க முடியாமல் போன ஐந்து நடிகைகள் இவர்கள்தான்.