தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் சிஷ்யன்.! அலப்பறை கிளப்பும் லோகேஷ்

Thalaivar 171 : தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

அதனால் லியோ படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. லியோ திரைப்படம் இதுவரை சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லியோ டீம் சென்னையில் உள்ள நேருவில் விளையாட்டு அரங்கில் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியது.

இனி நான் போற பாதை சிங்க பாதை.. விக்ரம் நடிப்பில் வெளிவர போகும் 5 படங்கள்.!

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினி உடன் கூட்டணி அமைத்து தலைவர் 171 வது படத்தை எடுக்கயுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க இருக்கிறது. அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

லோகேஷின் படங்களுக்கு தொடர்ந்து சண்டை மாஸ்டராக இருந்து வரும் அன்பு அறிவு தான் இந்த படத்திற்கும் கமிட் ஆகி இருக்கின்றனர். தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் போய்க்கொண்டிருக்கிறது அடுத்த வருடம்  மார்ச் அல்லது ஏப்ரலில் முடியும் என தகவல்கள் வெளி வருகின்ற இப்படி இருக்கின்ற நிலையில் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கையில் வேட்டு விழுந்ததால் காதல் பற்றிக் கொண்டது.! அமர்க்களம் அஜித் ஷாலினி காதலை புட்டு புட்டு வைத்த இயக்குனர்..

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தில் முதலில் ராகவா லாரன்ஸ் தான் நடிக்க வைக்க அணுகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது கால்ஷீட் கிடைக்காததால் அது நடக்கவில்லை எனவே தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.