இனி நான் போற பாதை சிங்க பாதை.. விக்ரம் நடிப்பில் வெளிவர போகும் 5 படங்கள்.!

Vikram : நடிப்பிற்கு பெயர் போன விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்துள்ளது இதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனருடன் கதை கேட்டு நடித்து வருகிறார் அப்படி விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் 5 படங்கள் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

தங்கலான் : சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட பா.ரஞ்சித் உடன் விக்ரம் கைகோர்த்து தங்கலான் நடித்து உள்ளார். படம் முழுக்க முழுக்க கோலார் தங்க சுரங்கத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் அவர்கள் எப்படி கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது குறித்து இந்த படம் பேச இருக்கிறது. தங்கலான் படம் அடுத்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

துருவ நட்சத்திரம் : பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது படத்தை கௌதம் மேனன் இயக்கிய உள்ளார் விக்ரம் இந்த படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறார். துருவ நட்சத்திரம் படத்தின் கதை என்னவென்றால் அரசாங்கத்திற்கு தெரியாமல் விக்ரம் ஒரு டீமை உருவாகி தீவிரவாதிகளை அழிப்பது தான் கதை.

கர்ணா : விக்ரம் நடிப்பில் விமல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது சில காரணங்களால் நிறுத்தி வைத்திருந்தனர் தற்பொழுது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி போய்க்கொண்டிருக்கிறது சீக்கிரம் படம் ரிலீசுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

விக்ரம் 62  : பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்ட  இயக்குனர் அருண்குமார் உடன் விக்ரம் இணைந்து தனது 62 வது படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

விக்ரம் 63 : அஸ்வின் ராம் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள திரைப்படம் விக்ரம் 63.. விக்ரம் 62 படத்தின் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பாகவே 63 படத்தின் அறிவிப்பு வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்க இருக்கிறது.