இவ்வளவு சிம்பிளான படத்துக்கு ஏன் இவ்வளவு செலவு.. தயாரிப்பாளர் பதிலால் ஆடிப்போன ரஜினி..

Rajinikanth: 73 வயதை கடந்தும் சினிமாவில் மவுசு குறையாமல் இருந்து புறம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவும், தயாரிக்கவும் ஏராளமான பிரபலங்கள் போட்டி போட்டுக் கொள்கிறார்கள். அப்படி சினிமாவில் பல அனுபவங்களுடன் இருந்து வரும் ரஜினிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இவருடைய திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் எப்பொழுதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி தயாரிப்பாளர் சொன்ன பதிலால் அதிர்ச்சடைந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜயுடன் நடித்து 16 வருடம் ஆகிவிட்டது.. மீண்டும் தளபதி 68 இல் இணையும் பிரபல நடிகர்.!

எடிட்டர் மோகன் தனது மகன் ஜெயம் ரவியை வைத்து படம் இயக்கும் போது அதனை சிறப்பாக தயாரிக்க வேண்டும் என நினைத்துள்ளார். மேலும் அந்த படத்தினை தனது மூத்த மகன் மோகன் ராஜா இயக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்துள்ளார். எனவே குடும்ப திரைப்படமாக ஆக்சன் கலந்த சிறப்பான படமாக அமைய வேண்டும் என எண்ணி ஜெயம் ரவிக்காக கதை எழுத ஆரம்பித்தார் எடிட்டர் மோகன்.

அப்படி ஜெயம் ரவியின் அறிமுக படமான ஜெயம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில் படத்தை முடித்த பிறகு ஒரு ப்ரீவியூ காட்சி ஏற்பாடு செய்வதற்கு எடிட்டர் மோகன் கிளம்பியுள்ளார். அப்பொழுது இந்த செய்தியை தெரிந்துக் கொண்ட ரஜினிகாந்த் எடிட்டர் மோகனுக்கு போன் செய்து சார் ஏதோ புது படம் எடுத்திருக்கிறீர்களாமே இன்னைக்கு ஷோ போடுறீங்களாம் நான் சும்மாதான் இருக்கேன் வரவா என்று கேட்டுள்ளார்.

உங்கள கல்யாணம் செய்ய போறவன் ரொம்பவும் குடுத்து வச்சவன் பிரபல நடிகையிடம் ஓபன்னாக சொன்ன ரஜினி

எனவே எடிட்டர் மோகன் சரி வாங்க சார் என கூப்பிட்டு உள்ளார் ரஜினி இந்த படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் பேசும் பொழுது படம் சிம்பிளான கதை இன்னுமும் குறைவான பட்ஜெட்டில் எடுத்திருக்கலாம் என கூறியுள்ளார். அதற்கு தயாரிப்பாளர், சார் இது என் மூத்த மகன் தயாரித்தது என் இளைய மகன் நடிக்கும் படம் சார் அவங்க வாழ்க்கையே இந்த படத்தில் தான் இருக்கு என கூறினார். உடனே இதனால் அதிர்ச்சியாகியுள்ளார் ரஜினிகாந்த் ஏனென்றால் இவருடைய இரண்டு மகன்களும் தான் இந்த படத்தில் நடித்து இயக்கியிருக்கிறார்கள் என்பது ரஜினிக்கு தெரியாது அதன் பிறகு வாழ்த்துக்களை கூறினாராம்.