விஜயுடன் நடித்து 16 வருடம் ஆகிவிட்டது.. மீண்டும் தளபதி 68 இல் இணையும் பிரபல நடிகர்.!

thalapathy 68 : தமிழ் சினிமாவில் மினிமம் கேரன்டி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் வெங்கட் பிரபு இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் இந்த நிலையில் பலமுறை பல பேட்டிகளில் இவரிடம் விஜய் வைத்து எப்பொழுது படத்தை இயக்குவீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த வகையில் தற்பொழுது விஜய் வைத்து தளபதி 68 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் படத்திற்காக பல வேலைகள் முன் கூட்டியே ஆரம்பித்து விட்டார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் லைலா, சினேகா, யோகி பாபு, பிரேம்ஜி அமரன்,  அஜ்மல் அமீர், மங்காத்தா திரைப்படத்தில் நடித்த நடிகர் என பலரும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

மது மட்டுமல்லாமல் அந்த விஷயத்திலும் வாரிசு நடிகை செம வீக்காம்.! அதுவும் ஒரே நாளில் மட்டும்..?

மேலும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது இந்த நேரத்தில் விஜயின் தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் வெளியாகும் என படக் குழு திடீரென ஒரு ட்வீட் போட்டுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா. அதுமட்டுமில்லாமல் இந்த அப்டேட் நியூ இயர்க்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது  ஏற்கனவே டைட்டில் பாஸ் என்ற டைட்டிலை வைத்துள்ளதாக தகவல் வைரலாகி வந்தது.

ஆனால் அந்த பெயர் கண்டிப்பாக கிடையாது என வைரலான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தயாரிப்பாளர் இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது அதாவது இந்த திரைப்படத்தில் காமெடியனாக கஞ்சா கருப்பு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது இவர் ஏற்கனவே விஜய் உடன் 16 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்திருந்தார்.

உங்கள கல்யாணம் செய்ய போறவன் ரொம்பவும் குடுத்து வச்சவன் பிரபல நடிகையிடம் ஓபன்னாக சொன்ன ரஜினி

சிவகாசி மற்றும் அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் தளபதி 68 திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.