அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த புஷ்பா 2 டீசர்?

Pushpa 2 Teaser: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை  படக் குழுவினர்கள் அறிவித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட் அடித்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று கொடுத்தது.

கதிர் வேலைக்கு போவது தெரிந்து அழும் ராஜி!! யூனிஃபார்முடன் வந்து வேலைக்கு போறேன்னு திமிராக பாண்டியனிடம் நடந்து கொண்ட கதிர்..

உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் செய்த புஷ்பா படத்தினை தொடர்ந்து அதனுடைய இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வந்தார். சம்பரம் மரம் கடத்தலை மையமாக வைத்தெடுக்கப்பட்ட இப்படத்தில் புஷ்பராஜ் என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

அல்லு அர்ஜுன் மேலும் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பகத் பாசில் வில்லனாக மிரட்டி இருந்தார் அதேபோல் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் டான்ஸ் ஆடியது மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. தற்பொழுது புஷ்பா 2 படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக் குழுவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

அடப்பாவி வயித்து புள்ள காரின்னு கூட பாக்காம குழந்தையை கொல்ல பாக்குறியே.. வளைகாப்பு அர்ஜுன் போட்ட மாஸ்டர் பிளான்.. பல்பு வாங்கி அசிங்கப்பட்டு நின்ற தமிழ்..

இதற்கு ‘புஷ்பா தி ரூல்’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். அதன்படி புஷ்பா 2 படத்தின் டீசர் வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க மைத்ரேயி மூவி மேக்கர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.