ஜப்பான் ட்ரெய்லர் வெளியீடு விழாவில் சூர்யா அணிந்திருந்த இந்த டி-ஷர்ட்ரின் விலை எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

Actor Surya: நடிகர் சூர்யா சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜப்பான் படத்தின் டிரைலர் லான்ச் விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் விலை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் ஆன சூர்யா அன்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டு உள்ளார். அப்படி இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் இடையில் கலவை விமர்சனத்தை பெற்று தோல்வியினை சந்தித்து வந்தது. இந்த சூழலில் சூரரைப் போற்று படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தினை கொடுத்தார் மேலும் சூரரைப் போற்றப்படும் தேசிய விருதுகளையும் குவித்தது.

இவ்வாறு இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்துவரும் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என சூர்யா கூறினார்.

இந்த படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 43வது படத்தில் நடிகர் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ளனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மாப்ள அர்ஜுன் நீ போடற மனக்கணக்கை சுக்குநூறா ஒடச்சிடுவான் தமிழ்.! தப்பான ஆள லவ் பண்றியே மேக்கனா… தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர் அந்த வகையில் நடிகரும் கார்த்தியின் அண்ணனுமான சூர்யாவும் பங்கு பெற்றார்.

அப்படி இந்நிகழ்ச்சியில் பேசும் பொழுது தான் சூர்யா கைதி, ரோலக்ஸ் படத்தின் அப்டேட்டுகள்  பலவற்றையும் கூறி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார். ரசிகர்களும் சூர்யாவுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர் ஜப்பான் படத்தின் இந்த விழாவில் சூர்யாவின் காஸ்டியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வீட்டு பத்திரத்தை வைத்து அப்பாவை காப்பாற்ற மீனாவை தேடி திரியும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்படி இவர் அணிந்திருந்த சட்டை, கண்ணாடி அனைத்தையும் நோட் செய்த ரசிகர்கள் சூர்யா அணிந்திருந்த சட்டையின் விலை குறித்து தேடி உள்ளார்கள். அப்படி சூர்யா அணிந்திருந்த இந்த டி-ஷர்ட் விலை ரூபாய் 17,500. ஃப்ரெட் பெர்ரி என்னும் ஆன்லைன் ஷோரூமில் ஒரு சட்டை இருக்கிறது.

Actor Surya
Actor Surya

அதேபோல் சூரிய அணிந்திருந்த இந்த சட்டையும் இருப்பதனால் இதுவாக தான் இருக்குமோ என்றும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சூர்யா ஆயிரங்களில் துணி வாங்குவதில் என்ன ஆச்சரியம் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.