பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு மொக்கை வாங்கிய பார்ட் 2 திரைப்படங்கள்.! ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த யாஷ்

சினிமாயுலகில் ஒரு படம் ஹிட்டானால் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுத்து வருவதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.. ஆனால் முதல் பாகத்தை கொண்டாடிய ரசிகர்கள் இரண்டாம் பாகமும் நல்லா இருக்கும் என  எதிர்பார்த்து ஏமாந்த திரைப்படங்கள் சிலவற்றைப் பார்ப்போம்..

ஜெய்ஹிந்த் 2 : 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்து வெளிவந்த ஜெய்ஹிந்த் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து நல்ல வரவேற்பை கண்டது அதனால் அதன் இரண்டாம் பாகத்தை அர்ஜுனே இயக்கி, நடித்தும், தயாரித்தும் இருந்தார்..

ஜான்சி ராணியின் கொட்டத்தை அடக்கிய சக்தி.! கதிரை கட்டி போட்டு அடிக்கும் கௌதம்.. பதட்டத்தில் மருமகள்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மூன்று மொழிகளில் வெளியாகிய இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை ஆனால் கன்னடத்தில் மட்டும் இந்த படம் சிறந்த படத்திற்காக விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருட்டுப் பயலே 2 : ஜீவன் ஹீரோவாக நடித்து 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திருட்டுப் பயலே படத்தில் சோனியா அகர்வால் ஹீரோயின்னாக நடித்திருந்தார். முதல் பாகம் நல்ல வரவேற்பை கண்டதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா போன்றோர் நடிப்பில் வெளிவந்த பார்ட் 2 திரைப்படம் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் மிகவும் அடி வாங்கியது..

அஜித் பத்திரிகையாளர்களை பார்ப்பதில்லை, ஒதுக்கி வருகிறார் என சொல்பவர்களுக்கு பதிலடி கொடுத்த பிரபலம்.

ஜித்தன் 2 : ஜித்தன் படத்தை ராகுல் பிரமஹம்சா இயக்கி இருந்தார்.. இந்த படம் தான் நடிகர் ரமேஷ்க்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்த படம் ஆகும்.அதனை தொடர்ந்து  பார்ட் 2 பாகத்தில் நடித்தார் இந்த படத்தின் கதை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாததால் படம் மிகவும் அடி வாங்கியது..

வெண்ணிலா கபடி குழு 2 : விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தின் கதை மிகவும் எதார்த்தமாக இருந்ததால் மக்கள் இந்த படத்தை கொண்டாடினர் ஆனால் விக்ராந்த் மற்றும் பசுபதி நடித்த வெண்ணிலா கபடி குழு 2 எதிர்பார்த்த அளவு ஓடவில்லை..

பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா போன்ற பலர் நடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர் ஆனால் இந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றம் அடைய செய்தது..

கே ஜி எஃப் 2 : யாஷ் நடிப்பில் பிரசாத் நீல் இயக்கிய கே ஜி எஃப் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றது அதனால் கடந்த ஆண்டு வெளிவந்த பார்ட் 2 திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் பட்டைய கிளப்பியது.