என்னோட சினிமா வாழ்க்கை போகட்டும்.. பிள்ளைகளை வேறொரு துறையில் வளர்த்து விட்ட 5 முன்னணி நடிகர்கள்…

Papular Tamil Actors children chose different career: பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் தாங்கள் சினிமாவில் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் பொழுதே தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த சூழலில் சினிமாவே வேண்டாம் என மற்ற துறைகளில் சாதித்து காண்பித்த ஐந்து சினிமா பிரபலங்களின் வாரிசுகள் குறித்து பார்க்கலாம்.

ராமராஜன்: 80, 90 காலக்கட்டத்தில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் தான் ராமராஜன். நடிகை நளினி மற்றும் ராமராஜன் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களுடைய  மகள் அருணா ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதேபோல் மகன் அருண் ஆடிட்டராக உள்ளார்.

பணத்தை செலவு பண்ணிட்டேன் எனக்கூறி செய்யாத தப்புக்காக அடி வாங்கும் கதிர்.! குற்ற உணர்ச்சியில் கதறி அழும் ராஜி..

சின்னி ஜெயந்த்: காமெடியனாக பிரபலமான சின்னி ஜெயந்த் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பல குரலில் பேசும் கலைஞர் என பன்முக திறமைகளை கொண்டுக் விளங்குகிறார். இவர் ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு ஸ்ருதன் ஜெய் என்ற மகன் உள்ளார். இவர் தற்பொழுது திருப்பூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

செந்தில்: கவுண்டமணிவுடன் இணைந்து தான் செய்த காமெடிகளின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நகைச்சுவை நடிகர்  இவருடைய மகன் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

மாதவன்: சாக்லேட் பாய் நடிகரான மாதவனின் மகன் வேதாந்த் ஒரு இந்திய நீச்சல் வீரர் ஆவார். மேலும் வேதாந்த்‌ பல போட்டிகளில் ஜெயித்து மெடல்கள் வாங்கிய புகைப்படங்கள் வீடியோக்கள் பார்க்க முடிகிறது.

ஹாஸ்பிடலில் அண்ணாமலை தாலியை அடகு வைக்க சொன்ன மீனா.! ஸ்ருதியை கிழித்து தொங்கவிட்ட முத்து..

மணிரத்தினம்: தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனரான மணிரத்தினம் நடிகை சுஹாசினியை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். அவர் அரசியலில் ஈடுபடுவதற்காக அரசியல் படிப்புகளை படித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்