பணத்தை செலவு பண்ணிட்டேன் எனக்கூறி செய்யாத தப்புக்காக அடி வாங்கும் கதிர்.! குற்ற உணர்ச்சியில் கதறி அழும் ராஜி..

கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோரில்  கோமதி வீட்டிற்கு தெரியாமல் பாக்கியலட்சுமியின் உதவியுடன்  கதிருக்கும் ராஜுக்கும் திருமணம் செய்துவிட்டு ஒன்னும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டார்.

அதை தொடர்ந்து தற்போது வெளிவந்த பாண்டியன் ஸ்டோர்2 மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமம் இன்றைய பிரமோவில் கதிர் மற்றும் ராஜியை  பாக்கியலட்சுமி வீட்டுக்கு அழைத்து வருகிறார். காரை விட்டு இறங்கியதும் இரண்டு வீட்டுக்காரர்களும் வெளியே வந்து கதிர் மட்டும் ராஜியை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

ஹாஸ்பிடலில் அண்ணாமலை தாலியை அடகு வைக்க சொன்ன மீனா.! ஸ்ருதியை கிழித்து தொங்கவிட்ட முத்து..

கதிர் ராஜியை திருமணம் செய்து அழைத்து வந்ததை பார்த்து ராஜி குடும்பத்தினர் கதிரை அடிக்க செல்கின்றனர். உடனே கதிரின் அண்ணன்கள் தடுக்கின்றனர். அப்போது பாக்கியா  இவர்கள் இருவரும் காதலித்து விட்டனர். எனவே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என குடும்பத்தாரிடம் சொல்கின்றனர். அப்போது ராஜியின் அப்பா கதிரிடம் எங்கடா இங்கிருந்து எடுத்துட்டு போன நகை பணம் எல்லாத்தையும் உங்க அப்பா கிட்ட குடுத்துட்டியா என கதிரை அசிங்கமாக கேள்வி கேட்கிறார்.

உடனே அதற்கு கதிர் என்ன செய்வது என தெரியாமல் செலவு செய்து விட்டோம் என சொல்கிறார். அப்போது ராஜி அழுதபடியே கதிரை பார்த்துக் கொண்டு தலை குனிந்து நிற்கிறாள்.

நான் வாந்தி எடுத்ததை என்னையே சாப்பிட சொல்றியா.. இயக்குனரிடம் கர்ஜித்த இளையராஜா..

கதிரின் அப்பா பாண்டியனோ ஓடிப்போனதும் இல்லாம பணத்தை எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டன்னு  என் பெயரையும் கெடுத்துட்டியேடா என கதிரை அரைகிறார். ராஜி கதிர் அடி வாங்குவதை பார்த்து அழுதபடியே குற்ற உணர்ச்சியில் நிற்கிறாள்.

ராஜி மற்றும் கதிரின் மொத்த குடும்பமும் ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டு நிற்கிறது.  பாண்டியன் ஸ்டோர் 2 வில் அடுத்து என்ன ஆகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்