கோமதி செய்த தவறால் அசிங்கப்பட்டு நிற்கும் பாண்டியன்.! கதிரை கொள்ள வரும் ராஜியின் சித்தப்பா…

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமத்தில்  இன்றைய எபிசோடில் இரண்டு குடும்பமும் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது காரில் வந்து எழில் மற்றும் பாக்யா  இறங்குகிறார். பாக்கியாவை பார்த்ததும் இனியா அம்மா என சொல்லிவிட்டு போகிறார் இதை பார்த்த மற்றவர்கள் யார் எனக் கேட்கின்றனர். அதற்கு இனியாவின் அம்மா என்ன ராதிகா சொல்கிறார் காரில் இருந்து ராஜி இறங்குகிறாள் .

ராஜியை பார்த்துவிட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர். உனக்கு தாலி கட்டினவன் யாரு எனக் கேட்கின்றனர் உடனே கதிர் இறங்குகிறார். கதிரை பார்த்ததும் ராஜியின் அண்ணன் அடிக்க செல்கிறார். கதிரின் அண்ணன்கள் வந்து அதை தடுக்கின்றனர். இரு வீட்டினரும்  மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர் .

விவாகரத்து செய்தாலும் இனி இரண்டாவது திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் 4 நடிகர்கள்.!

அப்போது பாக்யா இவர்கள்  இருவரும் இன்று காலையில் திருமணம் செய்து கொண்டு என்ன செய்வது என்று நின்று கொண்டிருந்தனர். கதிர், மீனா மற்றும் கோமதி இவங்க மூணு பேரும் ரெண்டு நாளா எனக்கு  உதவி செய்தார்கள். கோமதி அக்கா என்கிட்ட நல்லா பழகுனாங்க. இவங்க எல்லாம் இன்னைக்கு காலையில கிளம்பிட்டாங்க.

ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தால் கதிர் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டு நின்னுட்டு இருந்தாரு என்ன பானு கேட்டா நாங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வீட்டுக்கு தெரியாது என்ன பண்றதுன்னு தெரியல  என சொன்னாங்க அதனால நான் கோமதி அக்காவோட பையன் ஆச்சே என கூட்டிட்டு வந்துட்டேன் என சொல்கிறாள்.

இருந்தாலும் ராஜியின் அண்ணன் கதிரையும் அவரது குடும்பத்தாரையும் தரகுறைவாக பேசுகிறான். ராஜிக்கு ஒன்னும் தெரியாது இவங்க தான் ஏதோ பிளான் பண்ணி நம்ம பொண்ண கூட்டிட்டு போய்ட்டாங்க என மொத்த குடும்பமும் சேர்ந்து கதிர் குடும்பத்தை திட்டுகின்றனர்.

சரஸ்வதியை காப்பாற்ற கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழ்.! மேக்னா கொலைக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா அர்ஜுன் கேள்வி எழுப்பிய ராகினி.!

மேலும் அதோடுமட்டுமில்லாமல் ராஜியின் சித்தப்பா கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான இவங்க வீட்ல ஒரு திருட்டு கல்யாணம் நடந்தது அப்ப நம்ம இவங்கள பார்த்து சிரிச்சோம்ல்ல அதுக்கு பழிவாங்குறத்துக்கு தான் அவங்க பையன வச்சு நம்ம பொண்ண கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பாங்க என சொல்கிறார்.

இதனைக் கேட்ட  பாண்டியன் குடும்பத்தினர்கள் நாங்களும் உங்களை மாதிரி தான் ஷாக்காகி இருக்கிறோம் என சொல்கின்றனர். அதோடு மட்டும்  இல்லாமல் கதிரை பார்த்து பாருடா இப்படி பேச வச்சுட்டியே என கேட்கின்றனர்.  இதனால் கடுப்பான கதிர் இந்த கல்யாணத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாத்தையும் நான் தான் செய்தேன் என சொல்லுகிறான்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்