தாலியை கழட்டி கதிர் மூஞ்சியில் எறிய சொன்ன ராஜியின் அப்பா!! செத்துருவேன் என மிரட்டும் பாட்டி!! பரபரப்பான சூழலில் பாண்டியன் ஸ்டோர்2..

பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமம் இன்றைய எபிசோடில் ராஜியின் சித்தப்பா சக்தி கத்தி எடுத்துக் கொண்டு கதிரை வெட்ட வருகிறார். அதனை தடுத்து விடுகின்றனர். அப்போது ராஜியின் சித்தப்பா வீட்டில் இருந்து எடுத்துட்டு போன நகை பணம் எங்க என கேட்கிறார்.

இவன் தான் உன்ன மிரட்டி பணம் நகைய எடுத்துட்டு வர சொன்னானா என கேட்கின்றனர். அதற்கு ராஜி ஒன்னும் சொல்லாமல் நிற்கிறாள். அப்ப பணத்தை உங்க அப்பா கிட்ட குடுத்துட்டீங்களா என கேட்கின்றனர் அதற்கு கதிர் கோபமாகி செலவு பண்ணிட்டோம் என சொல்கிறார்.

இப்படிப்பட்டவனையா நம்பி நீ ஓடிப் போயிட்ட என வீட்டில் இருக்கும் அனைவரும் ராஜியை திட்டுகின்றனர். அப்போது ராஜியின் பாட்டி பணம் நகை தான் முக்கியமா ராஜி முக்கியம் இல்லையா. யாருக்காவது ராஜிய கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது அவன்கிட்ட நகை பணத்தை எல்லாத்தையும் கொடுத்து தான் இருப்போம் அப்ப போய் நகை என்ன ஆச்சு பணம் என்ன ஆச்சுன்னு கேட்போமா அத விடுங்க என சொல்கின்றனர்.

4 வது நாளில் படுத்தேவிட்ட லால் சலாம் வசூல்… அப்புறம் என்ன நடையை கட்ட வேண்டி தான்

இந்த நகைக்கு பணத்துக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என பாண்டியன் சொல்லிக்கிட்டே கதிரை அறைந்து விடுகிறார். மேலும் கோமதியின் அண்ணன்களை பார்த்து உங்க தங்கச்சியை நான் இங்கிருந்து கூட்டிட்டு போகும்போது நான் வாங்கி கொடுத்த செருப்பு புடவையோடு தான் வந்தா அப்பக் கூட உங்க வீட்ல இருந்து ஒரு நகை கூட எடுத்துட்டு வரல. இப்ப என் பொண்டாட்டிய நான் எப்படி வச்சிருக்கேன், அவளுக்கு தேவையானத எல்லாத்தையும் பார்த்து பார்த்து நான் செய்றேன். இத்தனை வருஷத்துல என்னைக்காவது நகை வேணும் பணம் வேணும்னு என் பொண்டாட்டி உங்க வீட்டு பக்கம் வந்து நின்று இருக்காளா என கோபமாக பேசுகிறார்.

அதனைத் தொடர்ந்து ராஜியின்  அப்பா நான் உன்கிட்ட ஒன்னு தான் கேட்ககுறன் இனிமே நடந்ததை பத்தி நான் எதுவும் பேச மாட்டேன்  அந்த தாலிய மட்டும் கழட்டி கொடுத்துட்டு வந்துரு என சொல்கிறார். அப்போது அனைவரும் ஷாக் ஆகி நிற்க் கின்றனர்.

உடனே ராஜியின் பாட்டி அப்படி ஒன்னு நடந்ததுன்னா நான் செத்துடுவேன் என சொல்கின்றார். அவ யார கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க அத்தை பையன தான கல்யாணம் பண்ணிக்கிட்டா நீங்க எல்லாருமே சொந்தத்தில தான கல்யாணம் பண்ணிகிட்டீங்க அதுபோல தான் அவ அவளுக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணிக்கிட்டா என சொல்கிறாள். பாட்டி சொன்னதை கேட்டதும் அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். பிறகு ராஜியின் அப்பா என் மக செத்துட்டா எனக்கு இனிமே ஒரே புள்ள தான் அது குமரவேல் தான் என சொல்கிறார்.

சிக்கிய கலிவரதன் மாட்டிய ஆதாரம்… டார்ச்சர் செய்ததால் ஜெயில் வார்டன் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய சரஸ்வதி… தொக்கா பிடிக்கப் போகும் தமிழ்..

அதோட மட்டுமில்லாமல் இவ உறவே வேணாங்குறவங்க மட்டும் என்கூட உள்ள வாங்க மத்தவங்க எல்லாம் உள்ள வராதீங்க என சொல்லிட்டு போயிடுறார். பின்னர் அவரைத் தொடர்ந்து அனைவரும் சென்று விடுகின்றனர்.

பின்பு பாக்கியா கோமதியிடம் பேசி கதிர் மற்றும் ராஜியை வீட்டுக்கு அழைத்து செல்கிறார். வீட்டிற்கு சென்றதும் பாக்கியா பாண்டியனிடம் அண்ணன் என சொல்லி பேசுகிறாள். இவங்கள மன்னிச்சு ஏத்துக்கோங்க என சொல்லுகிறாள். அதனைத் தொடர்ந்து ராஜியிடம் உங்க அத்தை குடும்பம்  உனக்காக நிறையபண்ணி இருக்காங்க அவங்களை இனிமேல் எங்கேயும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. உங்க குடும்பம் மாதிரி இல்ல என சொல்லிவிட்டு அங்கிருந்து பாக்கியாவும் எழிலும் கிளம்புகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்