4 வது நாளில் படுத்தேவிட்ட லால் சலாம் வசூல்… அப்புறம் என்ன நடையை கட்ட வேண்டி தான்

Lal Salaam 4th Day Box office: ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆனால் ரிலீஸ்சான பிறகு சொல்லும் அளவிற்கு கதைக்களம் திருப்தி செய்யவில்லை.

இதனால் நான்காவது நாள் வசூலிலேயே லால் சலாம் படம் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன் குறைந்துள்ளது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் மற்றும் செந்தில் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் தான் அந்த இயக்குனர்.? உண்மையை உடைத்த அஞ்சலி..

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என படக் குழுவினர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

மேலும் ஐஸ்வர்யாவிற்கும் நல்ல பெயரை வாங்கி தரும் என எதிர்பார்க்கப்பட்டது இந்த சூழலில் தற்பொழுது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் வெளியான முதல் நாளில் 3.55 கோடி மட்டுமே வசூல் செய்த லால் சலாம் விடுமுறை நாட்களிலும் குறைவானவை வசூலையே பெற்றது.

9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட பிரபுதேவா இயக்கிய திரைப்படம்.! தலைவன் அப்பவே மாஸ் காட்டியுள்ளாரே…

அதன்படி இரண்டாவது நாளில் 3.25 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளில் 3 கோடி ரூபாயும் தற்பொழுது நான்காவது நாளில் கடுமையான சரிவுடன் ஒரு கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. வெளியான நான்கு நாட்களிலேயே மிகவும் குறைவான வசூலை செய்திருப்பதால் படக் குழுவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்