Pandian stores sujatha : ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. டிஆர்பி யில் முதலிடம் கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் ஸ்டாலின் சுஜிதா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து வெங்கட், குமரன், சரவணா, விக்ரம், ஹேமா, சித்ரா, காவ்யா, மாதவன், லாவண்யா, தீபிகா என பலர் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை கடந்து ஒளிபரப்பப்பட்டது. சமீபத்தில் தான் இந்த தொடர் ஒரு முடிவுக்கு வந்தது.
சார்பட்டா 2 – வுக்காக வெறித்தனமாக உடலை ஏற்றிய ஆர்யா… வைரலாகும் வீடியோ..
இந்தத் தொடர் முடிவுக்கு வந்த அதே வேகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனை ஆரம்பித்தார்கள். இந்த புதிய சீசன் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் தான் சுஜிதா நடித்து வந்தார் ஆனால் பாண்டியன் ஸ்டோர் இரண்டாவது சீசனில் தனம் நடிக்கவில்லை.
விஜய் தொலைக்காட்சியில் இரண்டாவது சீசனில் தனம் நடிக்காததால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தை அடைந்தார்கள் இந்த நிலையில் புதிய தொடர் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் சுஜிதா இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் கௌரி என்ற தொடரில் தான் இவர் நடிக்க இருக்கிறார். கௌரி தொடரில் லீட் ரோலில் தான் இவர் கமிட் ஆகியுள்ளார்.
இதோ அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..