கதை கேட்காமலேயே விஜயகாந்த் நடித்த திரைப்படம்.. குழந்தை மாதிரி அடம் பிடிப்பார் – ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்

Vijayakanth : ரஜினி, கமலுக்கு அடுத்து திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் இவர் 150கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட விஜயகாந்த் விருதகிரி படத்திற்கு பிறகு அரசியலில் முழு கவனம் செலுத்தினார்.

தன்னுடைய கட்சியை அடுத்தடுத்த லெவலுக்கு உயர்த்தி வந்த இவர் அடுத்த சிஎம் ஆக வருவார் என கணிக்கப்பட்டது ஆனால் உடல் ஒத்துழைக்காததால் ஓய்வு எடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

மோசமான விமர்சனத்தால் தோல்வியை சந்தித்த நல்ல படம்.? அஜித்திற்கே இந்த நிலைமையா.?

இன்று விஜயகாந்த் நம்முடன் இல்லை என்றாலும் அவரை பற்றிய பேச்சுக்கள் மட்டும் தொடர்ந்து வைரலாகி வருகின்றன அப்படி விஜயகாந்தை வைத்து உழவன் மகன் படத்தை எடுத்த இயக்குனர் அரவிந்த் சமீபத்தில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது என்னவென்றால்..

உழவன் மகன் படத்தை நாங்கள் ஆரம்பித்த நாளிலிருந்து முடியும் வரை அவர் கதை கேட்காமலேயே நடித்தார். அந்த படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் வரும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜயகாந்த் கூடவே இருந்த பையன்.. மொத்த யூனிட்டையும் கதி கலங்க வைத்து விட்டான் – நினைவுகளை பகிர்ந்த இமான் அண்ணாச்சி

பாடல்களை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது விஜயகாந்த் ஒரு குழந்தை மாதிரி அடிக்கடி எப்ப காட்டுவீங்க நான் பாக்கணும் பாக்கணும் என சொல்லுவார். ரொம்பவும் வெள்ளந்தியான மனிதர் என உழவன் மகன் படத்தின் இயக்குனர் அரவிந்தராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.