மோசமான விமர்சனத்தால் தோல்வியை சந்தித்த நல்ல படம்.? அஜித்திற்கே இந்த நிலைமையா.?

Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடுபவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விரு விருப்பாக நடந்து வருகிறார்.

படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது படம் இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சினிமா உலகைப் பொருத்தவரை கதை சரியில்லாமல் தோல்வி அடைந்த படங்கள் ஏராளம்.

விஜயகாந்த் கூடவே இருந்த பையன்.. மொத்த யூனிட்டையும் கதி கலங்க வைத்து விட்டான் – நினைவுகளை பகிர்ந்த இமான் அண்ணாச்சி

ஆனால் கதை நல்லா இருந்தும் மக்கள் மத்தியில் ஈடுபடாமல் போன படங்களும் இருக்கின்றன அப்படி ஒரு சம்பவத்தை தான் நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம் நடிகர் அஜித்குமார் திரை உலகில் இதுவரை 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தாலும்..

அதில் ஒரு சில படங்கள் எதிர்பாராத விதமாக தோல்வியையும் கண்டிருக்கின்றன அப்படி ஒரு படத்தை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்..
2001 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவெல்லாம் உன் வாசம் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஜோதிகா, சிவகுமார், நாகேஷ், யுவேந்திரன், விவேக் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜாவுக்கு பிடித்த அஜித் படம்.? இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்

படத்தின் கதை ரொம்ப அருமையாக இருக்கும். காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் இடம்பெற்று இருந்தன மக்கள் மத்தியில் இந்த படம் பெரியதாக எடுபடவில்லை அதற்கு காரணம் படம் வெளியான சமயத்தில் பல பத்திரிகைகளில் படம் நன்றாகவே இல்லை என விமர்சனங்கள் அடுத்தடுத்து வெளியாகின அதனாலையே மக்கள் மற்றும் ரசிகர்கள் அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கவில்லை..

அப்பொழுது இந்த படம் எடுபடவில்லை என்றாலும் பின் நாட்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிவி தொலைக்காட்சிகளில் சூப்பராக ஓடியது. இப்பொழுது கூட மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பேவரைட் படங்களில் இதுவும் ஒன்றாக இருந்து வருகிறது.