யுவன் சங்கர் ராஜாவுக்கு பிடித்த அஜித் படம்.? இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்

Yuvan shankar Raja : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் 80, 90களில் பல படங்களுக்கு இசையமைத்து தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். இன்னமும் சொல்லப்போனால் இவரது இடத்தை வேறு எந்த ஒரு இசையமைப்பாளரும் பிடிக்கவில்லை..

இப்படிப்பட்ட இளையராஜாவுக்கு திறமையான மகன்கள் உள்ளனர் அதில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.. இவரும் திரை உலகில் தொடர்ந்து இசையமைப்பாளராக பயணித்துக் கொண்டிருக்கிறார் பெரிய படங்கள் முதல் சின்ன படங்கள் வரை சிறப்பாக இசையமைத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

Vidaamuyarchi : அஜித்தால் மகிழ் திருமேனிக்கு வந்த பிரச்சனை.. சொன்ன தேதியில் படப்பிடிப்பு முடியுமா.?

குறிப்பாக அஜித் படம் என்றால் வேற லெவலில் சம்பவம் செய்வார் அந்த வகையில் தீனா, பில்லா என சொல்லிக் கொண்டே போகலாம்.. அந்த அளவிற்கு அஜித் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.. அஜித்தின் தீவிர ரசிகரும் கூட இப்படிப்பட்ட யுவன் சங்கர் ராஜா தளபதி விஜய் நடிக்கும் GOAT படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதையும் தாண்டி படங்களை தயாரிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அப்படி சமீபத்தில் ஒரு சில படங்களை தயாரித்து வெற்றி பெற்றுக் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா பழைய பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த மூன்று படங்கள் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..

கிளாமராக நடித்து வாய்ப்பை இழந்த டாப் 5 நடிகைகள்.! குழந்தை குட்டியென செட்டில் ஆன கிளாமர் குயின் நமிதா..

எனக்கு மூன்று படங்கள் பிடித்திருந்தது அதில் ஒன்று அஜித்தின் நேர்கொண்ட பார்வை, சூர்யாவின் என் ஜி கே மற்றொன்று சிவகார்த்திகேயனின் ஹீரோ என குறிப்பிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பரப்பி கொண்டாடி வருகின்றனர்.