கார்த்தியின் ஜப்பான் படம் மட்டுமல்ல ஏராளமான கோலிவுட் நடிகர்களின் 25வது படம் தோல்விதான்.. இந்த லிஸ்டில் இருந்து தப்பித்த அஜித், தனுஷ், சூர்யா..

Tamil Actor Movies: முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தியின் ஜப்பான் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது இப்படம் கார்த்தியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜப்பான் கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் தோல்வி அடைந்துள்ளது. எனவே ஜப்பான் என்று சொன்னாலே ரசிகர்கள் மொக்கை என விமர்சித்து வருகிறார்கள். அப்படி கார்த்தியின் 25வது படம் மட்டுமல்ல கோலிவுட்டில் இருக்கும் ஏராளமான நடிகர்களின் 25வது படம் மொக்கையாக தான் இருந்தது என மீம்ஸ்களை குவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இந்த லிஸ்டில் இருந்து தனுஷ், அஜித், சூர்யா இவர்கள் மட்டும் தப்பித்துள்ளனர்.

கார் போன விஷயத்தை அப்பாவிடம் மறைத்து வேறு வேலை தேடும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி ஜப்பான் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது மேலும் டீசர், ட்ரைலர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எதிர வைத்தது.

ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜப்பான் கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலிலும் தோல்வி அடைந்துள்ளது. ஜப்பான் கார்த்தியின் 25வது படம் ஆகும். இவ்வாறு கார்த்தி மட்டுமல்லாமல் கோலிவுட் ஏராளமான நடிகர்களின் 25வது படம் பிளாப்பாகி இருப்பதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றனர். அப்படி ஜெயம் ரவியின் 25வது படமான பூமியும் பிளாப் தான்.

கோடீஸ்வரியை நடுரோட்டில் வைத்து அசிங்கப்படுத்திய சேட்டு.. ஐஸ்வர்யா சாப்பிடுவதை பார்த்து கடுப்பான பாட்டி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அதேபோல் ஆர்யாவின் 25வது படமான வாசமும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படமும் படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து தற்போது வரையிலும் விஷாலின் சண்டக்கோழி படம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக இருந்தது. ஆனால் விஷாலின் 25வது படமாக வெளியான சண்டக்கோழி 2 மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

மேலும் விஜய்யின் 25வது படமான கண்ணுக்குள் நிலவு படமும் சுமார் என்ற விமர்சனத்தையே பெற்றது. இவ்வாறு இந்த லிஸ்டில் அஜித், சூர்யா, தனுஷ் இவர்கள் மட்டுமே தப்பித்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்