ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா.. புஷ்பா 2 – வில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட போவது யார் தெரியுமா.?

pushpa 2: அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் புஷ்பா திரைப்படத்தில் எந்த நடிகை ஐட்டம் டான்ஸ் ஆட போகிறார் என்பது குறித்த தகவல் கசிந்திருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் புஷ்பா.

சீரியலில் சன் டிவி க்கே டாப் கொடுக்க வருகிறது ஜீ தமிழ்.. டிஆர்பி-யில் இடம் பிடித்த முக்கிய சீரியல்..! இதோ டாப் 10 லிஸ்ட்…

இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் போன்றோர்கள் இணைந்து நடிக்க சுகுமார் இயக்கினார். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்த புஷ்பா சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

மேலும் புஷ்பா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அப்படி சாமி சாமி பாடல், ஊ சொல்றியா மாமா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சாமி பாடலுக்கு இப்பட நாயகி ரஷ்மிகா மந்தனா நடனம் ஆடினார். ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா சிறப்பு தோற்றத்தில் ஐட்டம் டான்ஸ்  ஆடினார். இந்த இரண்டு பாடல்களும் ராஷ்மிகா மற்றும் சமந்தாவிற்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது.

அண்ணாமலையிடம் சொல்லி குடும்பத்தாரிடம் அசிங்கப்படுத்தும் மீனா.. எவன் தப்பு செஞ்சாலும் என் மேல தான் பழி விழும் சோகத்தில் முத்து.. தப்பு மேல தப்பு பண்றீங்களே மீனா..

இதனை அடுத்து இரண்டாம் பாகத்திலும் இது போன்ற ஒரு ஐட்டம் பாடல் இருக்கிறதாம் அதற்கும் சமந்தாவை ஆட வைக்க பேச்சுவார்த்தை நடந்தது ஆனால் தற்பொழுது சமந்தா ட்ரீட்மெண்டில் இருப்பதால் அந்த பாடலுக்கு திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்தவுடன் சமந்தா போன்ற ஐட்டம் நடனம் ஆடாத நடிகைகள் தான் இது போன்ற பாடல்களில் ஆடினால் நன்றாக இருக்கும் ஆனால் திஷா பதாணி நடிப்பில் எத்தனையோ பாடல்கள் வந்துவிட்டது எனவே சமந்தா அளவிற்கு கிரேஸ் இருக்காது என கூறுகிறார்கள்.