நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்… குட்டி நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷின் மருமகன்..

Nilavukku Emel Enadi Kobam: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் ரொமான்டிக்கான போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகராக அறிமுகமான தனுஷ் தற்பொழுது அரை டஜன் படங்களுக்கு மேல் கை வாசம் வைத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பலமொழி திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

தற்பொழுது தெலுங்கில் சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீப காலங்களாக தனுஷின் படங்கள் மிகப் பெரிய வெற்றினை பெற்று வந்தது இந்த சூழலில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படம் கலவை விமர்சனத்தை பெற்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

இதனை அடுத்து மற்ற மொழிகளிலும் நடித்து வரும் தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் எல்ரா இயக்கவுள்ள ரஞ்சனா 2 படத்தில் நடிகர் கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பான் இந்திய அளவில் பிசியாக இருந்து வரும் தனுஷ் பா பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து தன்னுடைய 50வது படத்தை அவரை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளது.

Nilavukku Emel Enadi Kobam
Nilavukku Emel Enadi Kobam

இப்படத்திற்கான சூட்டிங் முடிந்து ரிலீஸ்கான வேலைகளை படக்குழு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இப்படத்தில் ஹீரோவாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்க குட்டி நயன்தாரா அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கிறார்..

குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

ரொமான்டிக்கான கதைகளத்தை மையமாக வைத்து வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர தனுஷின் வொண்டர்பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது. தற்பொழுது காதலர் தினத்தை முன்னிட்டு  இப்படத்தின் ரொமான்டிக்கான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் பவிஷ் உடன் அனிக்காக கடற்கரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.