தலை தூக்கவே விட மாட்டாங்க போல.. விஜய்யின் “GOAT” படத்திற்கு வந்த புது சிக்கல்!

GOAT : சினிமா உலகில் ஒரு படம் வெற்றி அடைய தலைப்பு மிக முக்கியமாகமுக்கியமாக இருக்கிறது. ஷூட்டிங் ஆரம்பிக்க போவதற்கு முன்பே படத்தின் தலைப்பை வைக்கின்றனர்.. தலைப்பை வைத்து பிறகு மாற்றிக் கொண்டு இருப்பார்கள். தற்பொழுது விஜய் படத்திற்கு நடந்து வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்திற்கு GOAT (the greatest of all time) என தலைப்பு வைத்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பையும் கிளப்பியது.  படத்தில் விஜயுடன் இணைந்து 90 ஸ் நடிகர், நடிகைகளான சினேகா, லைலா..

கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய 5 பிரபலங்கள்.!

ஜெயராம், மைக் மோகன், பிரபு, பிரசாந்த் என பலர் நடிக்கின்றனர். மேலும் மீனாட்சி சவுத்ரி, விடிவி கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், அரவிந்த் ஆகாஷ் என மிகப் பெரிய திரைப்பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் GOAT (greatest of all time) என தலைப்பு வைக்கப்பட்டது தான் தற்பொழுது பஞ்சாயத்தையே கிளம்பி இருக்கிறது.

இப்படி ஒரு தலைப்பு வைத்தால் பி, சி சென்டர்களில் உள்ள மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தலைப்பு ரீச் ஆகாது அது பெரிய அளவில் வசூலை பாதிக்கும் என விநியோகஸ்தர்கள்.. இந்த படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விரைவில் மாற்ற சொல்லுங்கள் என கூறி வருகின்றனர்.

பங்காளி கொஞ்சம் நஞ்ச ஆட்டமா ஆடுன.! சிங்கம் சூர்யா போல் ஓங்கி ஒரே அடியாக அடித்த முத்து.! எழுந்திருக்க முடியாமல் திணறும் மனோஜ்..

மேலும் கோட் என்றே போஸ்டரில் போடுங்கள் அழுத்தம் கொடுத்த வருகின்றனர். அடுத்து வரவுள்ள போஸ்டர்களில் கோட் என்று பெயரில் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.