பொங்கல்ல நாங்க தான் கிங்.. டிஆர்பி எகிற வைக்க vijay tv யில் ஒளிபரப்பப்படும் புதிய திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

New Movies on Vijay TV on Pongal Day : பொதுவாக பண்டிகை நாட்கள் என்றாலே தொலைக்காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நிலவி வரும் அந்த வகையில் எப்படியாவது டிஆர்பி யில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பொங்கல் பண்டிகையை குறி வைத்து புதிய திரைப்படங்களை வெளியிடுவார்கள்.

அந்த வகையில் டிஆர்பி யில் சன் தொலைக்காட்சிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எப்பொழுதும் போட்டி இருந்து கொண்டு தான் இருக்கும் அப்படிதான் பொங்கல் தினத்தில் விஜய் தொலைக்காட்சி புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

விஜயகாந்துடன் நேருக்கு நேர் மோதிய விஜய் திரைப்படங்கள்.. ஜெயிச்சது யார் தெரியுமா.?

உதயநிதி ஸ்டாலின் வடிவேலு நடிப்பில் வெளியாகிய மாமன்னன் திரைப்படத்தை பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக 15ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள் ஜனவரி 15 மாலை 5 30 மணிக்கு தான் மாமன்னன் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.

அதேபோல் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக இரவு 9 மணிக்கு போர் தொழில் திரைப்படம் ஒளிபரப்புகிறார்கள் இந்த திரைப்படத்தில் சரத்குமார் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் ஜனவரி 16ஆம் தேதி உழவர் தின சிறப்பு திரைப்படமாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய பிச்சைக்காரன் இரண்டாவது பாகம் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

தெரியாம அந்த சூர்யா படத்தில் நடிச்சிட்டன்… இன்றுவரை வருத்தப்படும் முன்னணி நடிகை..!

அதேபோல் ஜனவரி 16ஆம் தேதி 9 மணிக்கு மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற குட் நைட் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு சரத்குமார் நடிப்பில் உருவாகிய பரம்பொருள் திரைப்படம் வெளியாக இருக்கிறது இப்படி புதிய திரைப்படங்களை வெளியிட்டு டிஆர்பிஇல் நல்ல இடத்தை பிடிக்கலாம் என விஜய் டிவி பக்காவாக பிளான் செய்துள்ளது.