அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பிடித்த நெல்சன் திலீப்குமார்.. இத்தனை கோடி சம்பளமா.?

Nelson Dilipkumar : தமிழ் சினிமாவில் கவனிக்கப்படக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலிப் குமார்.  கோலமாவு கோகிலா, டாக்டர் என வெற்றி படங்களை கொடுத்த இவர் அடுத்து விஜயை வைத்து பீஸ்ட் படத்தை பிரமாண்டமாக எடுத்தார் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது அதனைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை உருவாக்கினார் இந்த படம் ஷூட்டிங் நடக்கும் போதே பல தடைகள் வந்தது இருப்பினும் மனம் தளராது நெல்சன் படத்தை எடுத்தார்.

முரட்டு சிங்கிள் எஸ்.ஜே சூர்யாவின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா?

படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவ ராஜ்குமார், மோகன்லால், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி,  தமன்னா, சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.

 படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது.  ஆம் உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. தமிழகத்தில் மட்டும் 250 கோடி வசூல் அள்ளியது இந்த படத்தை இயக்க நெல்சன் 10 கோடி சம்பளம் வாங்கினார்.  ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு திடீரென தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்.

காசுக்காக ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு அழைக்கும் விஜயா.. முத்துக்காக இறங்கி போய் பேசும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு சுமார் 55 கோடி சம்பளம் பேசி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் லிஸ்டில் 7 வது இடத்தில் நெல்சன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.