நீயா நானா கோபிநாத்தின் அண்ணன் இவரா.? அட இவரும் ஒரு நடிகரா பலருக்கும் தெரியாத தகவல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளர் கோபிநாத். இவருடைய பேச்சுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் மிக  சாதாரணமாக நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்கிவருகிறார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார், சமூக அக்கறை கொண்டவர், சிறந்த பேச்சாளர் என பல நற்பண்புகளைக் கொண்டவர். மேலும் இவர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தளபதி சட்டையை பிடித்து மிரட்டும் பிரசாந்த்.! வைரலாகும் GOAT போஸ்டர்.!

இவர் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசும்போது நானும் என் அண்ணனும் ரொம்ப பேசிக்க மாட்டோம் அஞ்சு வயசுல அண்ணன் தம்பி பத்து வயசுல பங்காளி  அப்படிலாம், இல்லாம எப்பவும் அண்ணனாவே கடந்த ஒரு 15 வருஷமா எனக்கு தம்பியாகவே இருக்கிற எங்க அண்ணன் ஏதாவது ஒன்னுனா தம்பி கிட்ட கேட்டு சொல்றேன் என சொல்லுவார். அவரே செய்ய மாட்டார் அண்ணா நீ சொல்லு என சொன்னா கூட இல்ல நீ சொல்லு என எனக்கு ரொம்ப இடம் கொடுப்பார். நிறைய இடத்துல  தன்ன நகத்துக்கிட்டு எனக்கு இடம் கொடுப்பார் என அவரது அண்ணனை பற்றி மிக நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

அப்படிப்பட்ட அவருடைய அண்ணன் வேறு யாரும் இல்லை. அவரும் ஒரு பிரபலம் தான். அவரும் சின்னத்திரை, வெளித்திரை என  அனைத்திலும் நடித்துள்ளார். தொகுப்பாளர் கோபிநாத் அவர்களின் அண்ணனின் பெயர் பிரபாகரன் சந்திரன்.

தளபதி விஜயின் கடைசி பட இயக்குனர் இவரா.? வைரலாகும் மாஸ் தகவல்..

இவர் தற்போது ஜீ தமிழில் சீதாராமன் என்ற சீரியலில்  ராமுக்கு தந்தையாக நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்  ஜீ தமிழில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மற்றும் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.