ரூ.100 கோடி டார்கெட் வைத்து அடிக்கும் நயன்தாரா.! விக்கிக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல..

Actress Nayanthara: நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல பிசினஸ் செய்வதிலும் கில்லாடியாக இருந்து வருகிறார். அப்படி தற்பொழுது ரூ.100 கோடி முதலீட்டில் தொழில் தொடங்கியிருக்கும் நிலையில் அந்த பொருட்கள் வாங்குவதில் ரசிகர்களும் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.

மலையாளத் திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நயன்தாரா தமிழில் சரத்குமார் உடன் இணைந்து ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் திரைப்படத்தில் ஆன்ட்டி போல் இருப்பதாக பல விமர்சனங்களை சந்தித்த நிலையில் தொடர்ந்து தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கலக்கி வருகிறார்.

மொட்டை ராஜேந்திரன் மொட்டைக்கு பின் இப்படி ஒரு சோக கதையா.! இதையும் தலைவன் சிரிச்சுக்கிட்டே சொல்றாரே..

அதோடு மட்டுமல்லாமல் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் ஒருவராக நயன்தாரா உள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து நயன்தாரா பல தொழில செய்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு பல கோடி முதலீட்டில் பிசினஸ்கள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தனது குழந்தைகளுடனும், படங்களில் நடிப்பது என்றும் பிசியாக இருந்து வந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அப்படி படங்களில் நடிப்பதை விட  தொழில்கள் செய்வதன் மூலம் கோடி கணக்கில் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது பெரிதாக நயன்தாரா விளம்பரங்களில் நடிக்க மாட்டார்.

கைதி படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது..! ஆத்தாடி இளநடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல.

மேலும் சமூக வலைதளங்களிலும் ஆர்வம் இல்லாதவர் இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நிலையில் இதில் 9skin என்ற அழகு சாதன பொருட்களுக்கான தொழிலை விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஆரம்பித்துள்ளார். இதனால் தான் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ப்ரோமோஷன் போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்த அழகு சாதன பொருட்களின் விலை 899 ரூபாயிலிருந்து ஆரம்பிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மொத்தமாக பிசினஸ் ரூm100 கொடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளதாம்.