சமந்தா வேண்டாம் என்று ஒதுக்கியவருக்கு காதலர் தின வாழ்த்து கூறிய சாய் பல்லவி.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே…

Naga Chaitanya-Sai Pallavi: காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சாய்பல்லவி நாக சைதன்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரிந்தார்கள்.

விவாகரத்திற்கு பிறகு இருவரும் பிசியாக தங்களது வேலையில் இருந்து வருகிறார்கள். சிம்பு மற்றும் திரிஷா இணைந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து தெலுங்கில் வெளியான படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

பாண்டியனை பார்க்க போன சரவணனுக்கு பெரும் அதிர்ச்சி.! அவசரப்பட்டுட்டியே சரவணா..

முதல் படத்தில் ஏற்பட்ட நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாற 2017ஆம் ஆண்டு குடும்பத்தினர்கள் சமதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டார்கள். 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த இவர்கள் பிறகு இணைவதாக தெரியவில்லை இந்த சூழலில் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஏராளமான தகவல்கள் வெளியானது.

அப்படி நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலியை காதலித்து வருவதாகவும் அவருடன் டேட்டிங்ஸ் சென்றதாகவும் புகைப்படங்கள் வெளியானது மேலும் இவர்கள் இருக்கும் நெருக்கமாக இருப்பதாகும் சொல்லப்பட்டது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சாய் பல்லவி நடிகர் நாக சைதன்யாவுடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .

வயசானாலும் பரவாயில்லை வசதியா இருக்காங்களே என திருமணம் செய்து கொண்ட 5 தமிழ் நடிகைகள்…

ஏற்கனவே நாக சைதன்யா- சாய்பல்லவி இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் 2021ல் வெளியான லவ் ஸ்டோரி படத்தில் இணைந்து நடித்தனர். இதனை அடுத்து தண்டேல் என்னும் படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள் எனவே புரமோஷனுக்காக இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.