லியோ படத்தில் என்னுடைய ஃபேவரைட் சீன்.. இயக்குனர் அட்லீ பேச்சு.!

Leo : தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் கடைசியாக எடுத்த மாஸ்டர், விக்ரம் படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து மீண்டும் விஜயுடன் கூட்டணி அமைத்து லியோ படத்தை எடுத்தார் பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படதில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். லியோ படத்தின் கதை என்னவென்றால்.. தாஸ் குடும்பம் மிகப்பெரிய போதைப்பொருளை விற்று வரும்.

குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? உச்சகட்ட கோபத்தில் ஆண்டவர்.. பரபரப்பான பிக்பாஸ் ப்ரோமோ

சில காரணங்களுக்காக ஆண்டனி தாஸ் தனது மகளை கொல்லுவார். அது அவருடைய மகன் லியோ தாசுக்கு சுத்தமாக பிடிக்காது எதிர்பார் வேறு வழி இல்லாமல் மகன் லியோ தாஸையும்  சுட்டுவிடுவார்கள். அவர் இறந்து விட்டதாக நினைத்துக் கொள்வார்கள் பல வருடங்கள் கழித்து காஷ்மீர் பக்கத்தில் பார்த்திபன் என்பவர்  பிரபலமடைகிறார்

அவருடைய புகைப்படம் இந்தியா முழுவதும் பரவுகிறது அதை எப்படியோ பார்த்த தாஸ் குடும்பம் அதிர்ச்சியாகிறது. காரணம் பார்த்திபன் பார்ப்பதற்கு லியோ தாஸ் போலவே இருப்பதுதான் பிறகு சந்தேகப்பட்டு  ஆண்டனி தாஸ் பார்த்திபன் இருக்கும் இடத்திற்கு போகிறார் அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல் தான் படம் சிறப்பாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று அதிக நாட்கள் ஓடியது.

லட்டு மாதிரி இரண்டு கதையை நிராகரித்த விஜய்.. தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா.?

550 கோடிக்கு மேல் வசுல அள்ளி வெற்றி நடை கண்டு வருகிறது இந்த படத்தை ரசிகர்கள் முதல் பெரியவர் வரை கொண்டாடு வருகின்றனர் சினிமா பிரபலங்களும் பார்த்து கொண்டாடுகின்றனர் இந்த நிலையில் லியோ  படம் குறித்து இயக்குனர் அட்லீ சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது என்னவென்றால்.. லியோ படம் தனக்கு மிகவும் பிடித்து உள்ளது என்றும் லோகேஷ் கனகராஜின் படம் இயக்கும் திறன் அதிகரித்து வருகிறது.

லியோ படத்தில் காபி ஷாப் காட்சி தனக்கு மிகவும் ஃபேவரைட் என்று கூறினார் மேலும் லோகேஷ் படங்களின் வில்லன்கள் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றும் அவர் எப்பொழுதுமே வழக்கமான பார்மட்டை உடைந்து வருவதாகவும் பாராட்டி உள்ளார் மேலும் படத்தில் நாயகனின் கெத்தையும் தன்னுடைய படங்களில் அவர் மெயின்டனன்ஸ் செய்து வருகிறார் எனக் கூறியிருக்கிறார்.