குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? உச்சகட்ட கோபத்தில் ஆண்டவர்.. பரபரப்பான பிக்பாஸ் ப்ரோமோ

Bigg Boss season 7 Tamil today promo 1: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் கமல்ஹாசன் வரும் எபிசோடுகளுக்காக மக்கள் எதிர்பார்த்து வருவது வழக்கம். அப்படி சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீம் செய்த தவறுகளை கமல்ஹாசன் கண்டிப்பாக தட்டி கேட்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எனவே இதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்து வந்த நிலையில் அதற்கான வேலை ஆரம்பம் ஆகிவிட்டது. அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் அவர்களுக்கு எதிராக மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீம்  இருந்து வந்தது இந்த வார கேப்டனான மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை மிகவும் கடுமையாக துன்புறுத்தி வந்தார்கள்.

லட்டு மாதிரி இரண்டு கதையை நிராகரித்த விஜய்.. தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா.?

தொடர்ந்து அவர்களிடம் சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்ததால் ரசிகர்கள் அனைவரும் மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீமுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் ஏஜென்ட் டீமுக்கு எதிராக போராடி வந்த அர்ச்சனா மற்றும் விசித்ராவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டு கிடைத்து வருகிறது.

எனவே இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனாவிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கமல்ஹாசன் எபிசோடுகள் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அதற்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

ஜெயிச்சிடுவோம் என்ற தெனாவட்டில் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து மொக்கை வாங்கிய 5 திரைப்படங்கள்.!

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தீர விசாரித்ததனாலையே வந்த தீர்ப்பு இது தீர்ப்பு அல்ல குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவத்து ஆக வேண்டும் என்பது உலக நியதி. குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? அந்தக் கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும் அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் இன்று இரவு என கூறுகிறார். இவ்வாறு கமல் கூறும் இந்த ப்ரோமோ மூலம் சூனியக்காரி மாயா பூர்ணிமாவின் ஏஜென்டீமுக்கு சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.