இந்த வாரம் முழுவதும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. சல்மான்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

OTT release this week: இந்த ஆண்டு இந்த வாரத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில் கடைசி வாரத்தில் ரசிகர்களை மகிழ்விக்க ஓடிடி தலங்களில் புது புது படங்கள் ரிலீசாக உள்ளது. அதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற படங்களும் இடம்பெற்று இருப்பதனால் ஓடிடி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அன்னபூரணி: ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் தினேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் அன்னபூரணி. இந்த படத்தை ஜி ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் ஜெய், சத்யராஜ், கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, கார்த்திக் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கலவை விமர்சனத்தை பற்றி இப்படம் வருகின்ற 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

மங்களவாரம்: இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவான மங்களவாரம் படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற டைட்டிலுடன் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் அஜ்மல் நந்திதா ஸ்வேதா, மாயல் ராஜ் பூத், சைதன்யா மற்றும் சுரேஷ் வர்மா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர் இப்படம் இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

வேலைக்காரியை விட கேவலமாக மீனாவை நடத்தும் விஜயா.. முத்து செய்த தரமான சம்பவம். சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

டைகர் 3: சல்மான்கான் மற்றும் கத்ரீனா கைஃப் கூட்டணியில் வெளியான டைகர் 3 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இப்படம் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

Kho Gaye Kahan: கோ கயே ஹம் கஹாம் என்ற ஹிந்தி படத்தில் மேதா ஷங்கருடன் வித்ராந்த் மாஸ்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

12th Fall: விது வினோத் சோப்ராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி இருக்கும் 12th fall திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டை பெற்ற நிலையில் இப்படம் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

வேலைக்காரியை விட கேவலமாக மீனாவை நடத்தும் விஜயா.. முத்து செய்த தரமான சம்பவம். சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

A Very Good Girl: பயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் துரதிஷ்டவசமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து கிரைம் படமாக உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற 27ஆம் தேதி நெட் பிளிக்ஸில் வெளியாகிறது.

Keedaa Cola: இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் ஏழ்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு நபர்களின் வாழ்க்கையை எப்படியாவது பெரிய இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக குளிர்பான பெட்டியில் கரப்பான் பூச்சியை போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பது இப்படத்தின் கதை இப்படமும் வருகின்ற 28ஆம் தேதி ஆகா ஓடிடியில் வெளியாகிறது.