நாங்க எல்லாம் அப்பவே அப்படி தான்.. வசூலில் மிரட்டி விட்ட எம்ஜிஆரின் 8 திரைப்படங்கள்… வசூலை பார்த்தால் தலையே சுத்தும்..

MGR super hit box office movie list: தமிழ் சினிமா திரைவுலகம், அரசியல் உலகம் என அனைத்திலும் சாதனை படைத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்தான் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். தற்பொழுது வெளியாகும் திரைப்படங்கள் 100 கோடியை வசூல் செய்தாலே எதிர்பார்த்த வசூல் இல்லை என கூறப்படுகிறது. அதன்படி ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் 500 கோடி முதல் 1000 கோடியை தாண்டி வசூல் செய்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் 60, 70 காலகட்டத்தில் ஒரு லட்ச ரூபாயை வசூல் செய்தாலே அந்த படம் பிளாக் பஸ்டர் தான். அப்படி எம்ஜிஆர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூலில் சாதனை செய்துள்ளது அது குறித்து பார்க்கலாம்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சூப்பர் ஹிட் முதல் திரைப்படம் தான் எங்கள் வீட்டு பிள்ளை. இந்த படம் 1965ஆம் ஆண்டு வெளியாக சென்னையில் மட்டும் சுமார் 13.23 இலட்சம் வசூலை செய்தது. இதனை அடுத்து 1969ஆம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அடிமைப் பெண் திரைப்படத்தில் இரட்டை கேரக்டரில் நடித்திருந்தார் இப்படம் சென்னையில் மட்டும் 13.6 லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

1970ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படத்தை தமிழில் மாட்டுக்கார வேலன் என்ற பெயரில் வெளியிட்டு 13.21 லட்சம் வசூலை பெற்றுள்ளது. மேலும் 1979ல் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான ரிக்சாக்காரன் என்ற படம் சுமார் 16.84 லட்சம் வசூலை செய்து சாதனை படைத்தது. திரை வரலாற்றில் 15 லட்சங்களை தாண்டி வசூல் செய்த முதல் திரைப்படமாக ரிக்சாக்காரன் அமைந்துள்ளது.

மேலும் 1973ஆம் ஆண்டு எம்ஜிஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் சுமார் 23.40 லட்சம் ரூபாயையும், இதனை அடுத்து 1975ஆம் ஆண்டு வெளியான இதயக்கனி என்ற படம் சுமார் 19.89 லட்சம் ரூபாயையும், அதேபோல 1977ல் மீனவ நண்பன் என்ற படம் 17.70 லட்சம் ரூபாயையும் வசூல் செய்துள்ளது.

குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

இதனைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டு வெளியான இன்று போல என்றும் வாழ்க என்ற திரைப்படம் 15.68 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இவ்வாறு எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் இவரை தவிர வேறு எந்த பிரபலத்தாலும் இவ்வாறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுக்க முடியவில்லை.