தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மீனாட்சி சவுத்ரி யார்? 26 வயதிலேயே அடித்த ஜாக்பாட்..

Thalapathy 68: தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பான் இந்திய படமாக லியோ திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. முதல் வாரத்தில் திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் எண்ணிகை தற்பொழுது குறைந்துள்ளது. இவ்வாறு லியோ படத்தினை தொடர்ந்து தளபதி 68 படம் குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது .

வாய திறந்தாலே கூவம் ஆறு ஓடும்.. கெட்ட வார்த்தையில் விஜய்யை ஓரங்கட்டிய 6 நடிகைகள்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு-விஜய் கூட்டணி அமைந்துள்ளது. தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாத், மைக் மோகன் ஆகியோர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கின்றனர்.

மைக் மோகன் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இவரை தொடர்ந்து அரவிந்த் சாமியிடமும் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் ஆனால் கால்சீட் கிடைக்காத காரணத்தினால் மைக் மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில் விஜய்யின் இளம் வயது நண்பராக பிரபுதேவா மற்றும் பிரசாத் நடிக்க உள்ளனர்.

சில்லுனு ஒரு காதல் சூர்யா பூமிகாவையே ரொமான்ஸில் தோற்கடிக்கும் சுந்தர் சி-குஷ்பூ.! எங்க காதலுக்கு எண்டே இல்லைங்கோ…

இவ்வாறு தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி கமிட்டாகி உள்ளார். மீனாட்சி சவுத்ரி ஹரியானாவைச் சேர்ந்தவர் இவர் நீச்சல் வீராங்கனை ஆவார். பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சினிமா மீது ஆர்வம் இருந்ததால் மாடல் எனில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு MISS IMA பட்டத்தையும், 2018ஆம் ஆண்டு FEMINA MISS INDIA பட்டங்களையும் வென்றார்.

மேலும் out of love என்ற வெப் சீரியலிலும் நடித்து சினிமாவிற்கு அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தெலுங்கில் மூன்று படங்களில் நடித்துள்ளார்  தமிழில் அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் லீட் ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவ்வாறு தமிழில் இரண்டாவது படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.