பிரதீப்ப காலி பண்ணியது பத்தாதுன்னு இப்ப லோகேஷா… நைசாக கோர்த்து விட்ட மாயா

Bigg Boss 7 Maya: சினிமாவில் சிறந்த இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானதால் ஏராளமான முன்னணி நடிகர்கள் லோகேஷ் இயக்கத்தில் படம் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது லோகேஷ் விரைவில் ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார். கடைசியாக விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது 600 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை அடைந்துள்ளது. இவ்வாறு லோகேஷ் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வருவதனால் நிற்க கூட நேரமில்லாத அளவிற்கு பிஸியாக உள்ளார்.

இந்த வாரம் முழுவதும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. சல்மான்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா – லோகேஷ் குறித்து பேசியதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதாவது கமல்ஹாசனிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய மாயா கூறும் பொழுது லோகேஷ் கனகராஜ் இடம் ஒரு படத்திற்கான ஸ்கிரிப்ட் நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன். 100 நாள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வா அதற்குள் நான் படித்து வைத்திருக்கிறேன் என்று லோகேஷ் கூறியதாக மாயா கூறினார்.

ஏற்கனவே மாயா செய்த வேலையினால் பிரதீப் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் அடுத்த டார்கெட் லோகேஷ் தானா மாயா கொடுத்த ஸ்கிரிப்ட் எல்லாம் லோகேஷ் படமாக்கினால் அவருடைய கேரியரே மொத்தமா போய்விடும் எனவே தயவுசெய்து மாயாவிற்கு வாய்ப்புக் கொடுத்து தப்பு செய்து விடாதீர்கள் என லோகேஷுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மீனாவை வேலைக்காரியை விட கேவலமாக நடத்தும் விஜயா.. முத்து செய்த தரமான சம்பவம்.! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

80 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் மாயா என்னதான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும் ஏராளமான ஹேட்டர்ஸ்களை சம்பாதித்துள்ளார். எனவே ரசிகர்களைப் பொறுத்தவரை மாயா என்றாலே நெகட்டிவ் தான்.