படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

Master suresh: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வரையிலும் படங்களில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் மாஸ்டர் சுரேஷ் இவர் பிரபல சீரியல் நடிகையின் சகோதரர் என்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக படங்களில் பிளாஷ்பேக் காட்சியில் குழந்தை நட்சத்திரமாக யாராவது ஒருவரை நடிக்க வைப்பது வழக்கம் அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளமைப் பருவ குட்டி ரஜினிகாந்தாக நடித்து புகழ்பெற்றவர் தான் மாஸ்டர் சுரேஷ். மாஸ்டர் சுரேஷ் ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் நடித்திருந்தார்.

ஜெயிலில் இருந்ததை நினைத்து பைத்தியம் போல் நடந்து கொள்ளும் சரஸ்வதி.! என்ன செய்யப் போகிறார் தமிழ்.. வார்டன் நிலைமை என்ன..

இதனைத் தொடர்ந்து கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா மற்றும் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி தற்பொழுது வரையிலும் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த பிரபல நடிகையை திருமணம் செய்துக் கொண்டார்.

master suresh
master suresh

திருமணம் செய்துக் கொண்ட சில காலங்களிலேயே இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர் விஜய் டிவியில் சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்திருந்த சுஜிதாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்து வட்டிக்காரன் சிட்டிக்கு செருப்படி பதில் கொடுத்த முத்து.. மீனா நீங்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு கொஞ்சமாவது புரிஞ்சிகோங்க..

சுஜிதாவும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கும் நிலையில் இவர் தற்பொழுது தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் திரைப்படங்களிலும் தனக்கு கிடைக்கும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தனது அண்ணன் மாஸ்டர் சுரேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

master suresh
master suresh