நடிகைகளை ஒரு ஊறுகாய் போல் கூட மதிக்காத நடிகர்கள்.! உங்களுக்கெல்லாம் அக்கா தங்கை இல்லையா..

actress trisha
actress trisha

Actress Trisha: மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதற்கு முன்பு ஏராளமானவர்கள் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி உள்ளனர் அது குறித்த லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது. சமீபத்தில் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசினார் இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஏராளமான திரையுலகினார்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் திரைவுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைவுலகில் இருந்தும் சிரஞ்சீவி திரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். எனவே இதன் காரணமாக மன்சூர் அலிகான் மீது டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மன்சூர் அலிகான் மட்டும் நடிகைகள் பற்றி தரகுறைவாக பேசவில்லை இவருக்கு முன்பு சிலரும் பேசியுள்ளனர்.

புது கார், சாக்கு மூட்டையில் பணம்.. பிரபல நடிகரை அசத்திய விஜயகாந்த்..! மறக்க முடியாத தருணம்..

ராதாரவி vs நயன்தாரா: தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமான நடிகவேள் எம்.ஆர் ராதா அவரது மகன் தான் ராதாரவி. இவர் கோலிவுட்டில் சீனியர் நடிகராக இருந்து வரும் நிலையில் ஒருமுறை பட விழா ஒன்றில், முன்னாடி எல்லாம் பார்த்தவுடன் கும்பிடுவது போன்று இருப்பவர்களை சீதை வேஷத்துக்கு போட்டார்கள் இப்பொழுது எல்லாம் பார்த்தவுடன் கூப்பிடுவது போன்ற இருப்பவர்களையும் சீதை வேஷத்துக்கு போடுகிறார்கள் என்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ரோபோ சங்கர் vs ஹன்சிகா மோத்வானி: சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கி வரும் ரோபோ சங்கர் தனது காமெடியினால் பலரையும் கவர்ந்தார். சமீபத்தில் ஹன்சிகா மோத்வானி மெழுகு பொம்மைதான்.. மைதா மாவை பிசைந்து சுவற்றில் அடித்தால் ஒட்டிக்கொண்டது மாதிரி இருப்பார் படத்தின் ஒரு காட்சியில் ஒரு பெட்டுக்கு அடியில் அவரது காலை நான் தடவ வேண்டும் எப்படியாவது செய்து விடலாம் என்று இருந்தேன் ஆனால் அவர் விடவில்லை நடிகர் மட்டும்தான் தொட வேண்டும் என கண்டிஷன் போட்டார் என இவர் பேசியதற்கு பத்திரிக்கையாளர்கள் கன்னடம் தெரிவித்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இதுதான் நடக்குது.. புதுசா ஒன்னும் சொல்லிக்கறதுக்கு இல்ல – வெளுத்து விட்ட நடிகை ராதிகா

கூல் சுரேஷ் vs தொகுப்பாளினி: நடிகராக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ஒரு கட்டத்தில் படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதை தொடங்கிய கூல் சுரேஷ் மன்சூர் அலிகான் சரக்கு பட விழாவில் ஒரு தொகுப்பாளினிக்கு மாலையை போட்டு பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.