உண்மையை சொல்றவன் தெய்வத்துக்கு சமம் என்று சொல்லுவாங்க.. லியோ படத்திற்கு வரும் விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு

Leo Movie :தளபதி விஜய் நிற்க கூட நேரமில்லாமல் படங்களில் நடித்து வருகிறார் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

லியோ படத்தின் கதை என்னவென்றால்.. ஆண்டனி தாஸ் தனது மகன் லியோ தாஸை  துப்பாக்கியால் சுட்டு விடுகிறார் அவர் இறந்து விட்டதாக நினைக்கின்றனர் பல வருடங்கள் கழித்து காஷ்மீர் பக்கத்தில் பார்த்திபன் என்பவர் பிரபலமடைந்து இந்தியா முழுவதும் பேசப்படுகிறார் இதை தாஸ் குடும்பம் பார்த்து அதிர்ச்சி அடைகிறது.

கடல் கடந்து சாதனை படைத்த லியோ.! அமெரிக்காவில் ஆதிக்கம் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

பார்த்திபன் பார்ப்பதற்கு லியோ தாஸ் போலவே இருக்கிறான் ஒரு வேலையை பெயரை மாற்றி அங்கு ஒளிந்து கொண்டிருக்கிறான் என நினைத்து அங்கு போகிறார்கள் அதன் பிறகு நடக்கும் கதை தான். படம் நிறைய ஆக்சன், எமோஷனல் என இருந்தாலும் ஏற்கனவே பார்த்த கதை என்பதால் அனைவரது மத்தியிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது இருப்பினும் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.

இதுவரை மட்டுமே 450 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. வருகின்ற நாட்களிலும் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது லியோ படத்தின் வசூல் எவ்வளவு என கேட்டனர் அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்..

தன்னுடைய மகள் பிறந்த நாளை பண்டிகை போல் கொண்டாடிய அசின்.! வைரலாகும் புகைப்படங்கள்.

லியோ கலெக்ஷன் பத்தி எனக்கு தெரியாது அது தயாரிப்பாளருடையது தான் தெரியும்.. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது ஆனால் படத்தின் இரண்டாவது பாதியில்  கொஞ்சம் லாக் அடிக்குது Mixed Review வந்து கிட்டு இருக்கு நான் பார்க்கிறேன் அதை ஏத்துகிறேன் மற்றபடி எனக்கு கலெக்ஷன் பத்தி தெரியாது என லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார்.