கடல் கடந்து சாதனை படைத்த லியோ.! அமெரிக்காவில் ஆதிக்கம் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

Leo USA Box office : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது முதலில் இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது ஆனாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விஜய்யின் மற்ற திரைப்படங்களை காட்டிலும் ஹிந்தியில் விஜய் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டும் இல்லாமல் படம் கிட்டத்தட்ட 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் படத்திலிருந்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

தன்னுடைய மகள் பிறந்த நாளை பண்டிகை போல் கொண்டாடிய அசின்.! வைரலாகும் புகைப்படங்கள்.

மேலும் லியோ திரைப்படத்தில் விஜய், திரிஷா முத்த காட்சிக்கு லோகேஷ் கனகராஜ் கட் என்று சொல்லவே இல்லையாம் இதனை சமீபத்தில் பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறியிருந்தார். மேலும் லியோ திரைப்படம் வசூல் கனிசமாக குறைய தொடங்கியுள்ளது இந்த நிலையில் அமெரிக்காவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் அமெரிக்காவில் லியோ திரைப்படம் 5 மில்லியன் யூஎஸ் டாலர் வசூல் செய்துள்ளது இது இந்திய ரூபாயின் மதிப்பில் 41 கோடியே 21 லட்சம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

25 வயதில் 19 வயது பையனை உருகி உருகி காதலித்த நடிகை.! பிறகு நடந்ததுதான் தரமான சம்பவம்..

மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் லியோ வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.