21 தடவை சத்யராஜுடன் நேருக்கு நேராக மோதிய விஜயகாந்த்.! யார் வெற்றியாளர் தெரியுமா.?

Vijayakanth vs Sathyaraj: விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் இருவர் நடிப்பில் வெளியான 21 திரைப்படங்கள் நேரடியாக மோதி கொண்டுள்ளனர். அது குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

1987ல் விஜயகாந்த் நடிப்பில் உழவன் மகன், சத்யராஜின் ஜல்லிக்கட்டு என இரண்டு திரைப்படங்களும் வெளியாகி விஜயகாந்த் படம் சூப்பர் ஹிட் வெற்றியினை பெற்றது. 1989ஆம் ஆண்டில் விஜயகாந்தின் ராஜநடை, தர்மம் வெல்லும் போன்ற படங்கள் வெளியாக சத்யராஜிற்கு வாத்தியார் வீட்டு பிள்ளை, திராவிடன் போன்ற திரைப்படங்கள் வெளியானது இதில் தர்மம் வெல்லும் படம் தான் வெற்றி பெற்றது.

1990ல் விஜயகாந்த் நடிப்பில் சத்யன் சத்யராஜ் நடித்த மல்லு வெட்டி மைனர் போன்ற படங்கள் ரிலீசான நிலையில் இதில் விஜயகாந்த் சத்யன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் அதே ஆண்டில் விஜயகாந்தின் புலன் விசாரணை சத்யராஜின் நடிகன் போன்ற திரைப்படங்களும் வெளியான நிலையில் இதில் புலவன் விசாரணை படம் மாஸ் காட்டியது.

மேகனாவை போட்டு தள்ளி சரஸ்வதி மீது பழியை போட பார்க்கும் அர்ஜுன்… கலிவரதன் பற்றி மொத்த உண்மையையும் உமாபதி மூலம் தெரிந்து கொண்ட மேகனா..

1991ல் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் சத்யராஜின் பிரம்மா பூஜை படங்கள் வெளியான நிலையில் கேப்டன் பிரபாகரன் 300 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது. 1992ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா போன்ற படங்கள் வெளியான நிலையில் இதில் சின்ன கவுண்டர் படம் மெகா ஹிட் வெற்றியை சந்தித்தது.

இதே ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் பரதன் சத்யராஜின் தெற்கு தெரு மச்சான் போன்ற படங்களும் ரிலீஸ் ஆனது இதில் விஜயகாந்த் பரதன் படம் தான் ஹிட் அடித்தது. அதோடு விஜயகாந்தின் காவிய தலைவன் சத்யராஜின் திருமதி பழனிச்சாமி படங்களில் காவியத்தலைவன் வெற்றி பெற்றது.

1993ல் விஜயகாந்த் நடிப்பில் கோவில் காலை சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் போன்ற படங்களில் ரிலீஸ் ஆன நிலையில் இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. 1994ல் விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ் சத்யராஜின் அமைதிப்படை வெளியாகி இவற்றில் இரண்டு படங்களுமே மெகா ஹிட் வெற்றி பெற்றது. ஆனால் இதில் விஜயகாந்த் படம் அதிக நாட்கள் ஓடியது இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட்ராஜ் சத்யராஜ் நடித்த வண்டிச்சோலை சின்ராசு போன்ற இந்த படங்களில் ஆனஸ்ட்ராஜ் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

மலேசியா மாமா செய்த வேலை.. மொத்த குடும்பத்திடமும் திட்டு வாங்கும் முத்து.! ஒட்டு கேட்டு விட்டு ரோகிணி எடுத்த அதிரடி முடிவு

இதே ஆண்டில் விஜயகாந்த் நடித்த பெரிய மருது படமும் சத்யராஜின் வீரப் பதக்கம் படமும் வெளியான நிலையில் இதில் பெரிய மருது தான் ரசிகர்களை கவர்ந்தது. 1995ல் விஜயகாந்த் நடிப்பில் திருமூர்த்தி சத்யராஜ் மாமன் மகள் போன்ற படங்கள் வெளியாகி இரண்டு படங்களும் சுமார் வரவேற்பை பெற்றது. 1996ல் விஜயகாந்தின் அலெக்சாண்டர் படம் சத்யராஜின் சேனாதிபதி என இந்த இரண்டு திரைப்படங்களில் விஜயகாந்தின் அலெக்சாண்டர் ஹிட் அடித்தது. 1997ல் விஜயகாந்தின் தர்மசக்கரம் சத்யராஜின் வள்ளல் படங்களில் வள்ளல்தான் ஹிட் அடித்தது. 1998ல் விஜயகாந்தின் தர்மா சத்யராஜின் கல்யாண கலாட்டா போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி தர்மா திரைப்படம் ஹிட் அடித்தது. 1999 விஜயகாந்தின் கண்ணுபட போகுதய்யா சத்யராஜின் மலபார் போலீஸ் படங்கள் ரிலீஸ் ஆனது இதில் விஜயகாந்தின் கண்ணுபட போகுதய்யா படம் 150 நாட்கள் வரை ஓடி ஹிட் அடித்தது.

2000ஆம் ஆண்டில் விஜயகாந்தின் வாஞ்சிநாதன் சத்யராஜ் நடிப்பில் லூட்டி போன்ற படங்கள் வெளியாகி வாஞ்சிநாதன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் 2003ல் விஜயகாந்தின் சொக்கத்தங்கம் சத்யராஜின் ராமச்சந்திரா படம் வெளியான நிலையில் இதில் விஜயகாந்தின் சொக்கத்தங்கம் படம் 100 நாட்கள் வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது.