ஜவான் முதல் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ்ப்படங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

OTT Release Movie: இந்த வாரம் ஷாருக்கான் நடித்த ஜவான் உள்ளிட்ட மொத்தம் ஐந்து தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் அந்த ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது.

இவ்வாறு திரையரங்கிற்கு சென்று எப்படி படங்களைக் கொண்டாடி வருகிறார்களோ அதே போல் ஓடிடியில் வெளியாகும் பொழுதும் அப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஐந்து தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

என்ன அர்ஜுன் அடி வயிறு பத்திகிட்டு எரியுதா.! மேகனாவால் தமிழுக்கு அடித்த லக்.. படையப்பா ரஜினி போல் முன்னேற போறாரோ

ஜவான்: ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஜவான் திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

ரத்தம்: பிச்சைக்காரன் 2 படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரத்தம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து இத்திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. ரத்தம் படத்தினை சிஎஸ் அமுதன் இயக்கியுள்ளார்.

ஆர் யூ ஓகே பேபி: லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஆர் யூ ஓகே பேபி என்ற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இன்று ஆகா ஓடிடியில் தளத்தில் வெளியாகிறது.

செழியன் வண்டவாளத்தை பாக்யாவிடம் சொல்லி மிரட்டிய மாலினி – பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

தமிழ்க்குடிமகன்: சேரன் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ்க்குடிமகன் படமும் இன்று ஆகா ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இருகப்பற்று படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகின்ற 6ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாரதிராஜா நடித்த மார்கழி திங்கள் படமும் வெளியாகிறது.