விஜயகாந்த் வேண்டாம் என நிராகரித்த 15 திரைப்படங்கள்.! ஒவ்வொன்றும் வேற லெவல் ஹிட்..! யார் யார் நடித்தார்கள் தெரியுமா.?

Vijayakanth: வில்லனாக அறிமுகமான விஜயகாந்த் ஹீரோவாக வேண்டுமென்ற எண்ணத்தில் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் வெற்றியினை கொடுத்துள்ளார். அதன்படி 80, 90 கால கட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் விஜயகாந்த் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவருடைய நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதே போல் இவர் நடிக்க மறுத்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக நடித்த முரட்டுக்காளை திரைப்படத்தில் வில்லனாக விஜயகாந்த் நடிக்க இருந்தது எனவே இதற்கான அட்வான்ஸ் பணத்தையும் விஜயகாந்த் பெற்றுவிட்டார். ஆனால் இப்ராஹிம் ராவுத்தர் அறிவுரையின்படி பணத்தை திருப்பி கொடுத்து முரட்டுக்காளை படத்திலிருந்து விலகினார் எனவே இவருக்கு பதிலாக ஜெய்சங்கர் அந்த வேடத்தில் நடித்தார்.

மலேசியா மாமா செய்த வேலை.. மொத்த குடும்பத்திடமும் திட்டு வாங்கும் முத்து.! ஒட்டு கேட்டு விட்டு ரோகிணி எடுத்த அதிரடி முடிவு

ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் அரசியல் படத்தில் விஜயகாந்த் நடிக்க இருந்தது ஆனால் சில காரணங்களால் விஜயகாந்த் நடிக்க மறுக்க அவருக்கு பதிலாக மம்முட்டி நடித்தார் அதேபோல் மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி திரைப்படத்திலும் விஜயகாந்த் நடிக்க இருந்ததாம். இதனை அடுத்து சங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படத்தில் விஜயகாந்த்திடம் கதை கூற ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் பிறகு அர்ஜுன் இந்த கதையில் நடித்திருந்தார்.

மம்முட்டி நடிப்பில் வெளியான மக்களாட்சி திரைப்படத்தில் விஜயகாந்த் தான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பார்த்திபன் முதன் முதலில் இயக்கி நடித்த புதிய பாதை படத்தின் கதையை முதலில் விஜயகாந்த்திடம் தான் கூறியுள்ளார் ஆனால் விஜயகாந்த் இதில் நடிக்கவில்லை. பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சூரியன் படத்தில் விஜயகாந்த் நடிக்க இருந்ததாம் ஆனால் கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் இப்படத்தில் இருந்து விலகி உள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டும் வேல ராமமூர்த்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

சரத்குமார் நடித்த ஐயா படத்தில் விஜயகாந்த் தான் முதலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய் உள்ளது. தளபதி படத்தில் மணிரத்தினம் விஜயகாந்த் தான் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் விஜயகாந்த் இதில் நடிக்க ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் பிறகு மம்முட்டி நடித்துள்ளார்.

மேலும் சத்யராஜ் நடித்த வள்ளல், மம்முட்டி நடித்த ஆனந்தம் போன்ற திரைப்படங்களில் விஜயகாந்த் தான் முதலில் நடிக்க இருந்துள்ளார். அதேபோல் இணைந்த கைகள் படத்தில் விஜயகாந்த் ரகுவரனும் நடிக்க இருந்துள்ளனர் ஆனால் விஜயகாந்த் நடிக்க மறுத்த காரணத்தினால் பிறகு ராம்கியும் அருண்குமாரும் இணைந்து நடித்துள்ளனர்.