லோகேஷ் அண்ணா இப்படி மாட்டிகிட்டிங்களே.? ஆதாரத்தை வெளியிட்டு பங்கம் செய்யும் ரசிகர்கள்.

Leo : விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக்கிய திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தின் வசூல் 500 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல் வெளியான நிலையில் அதை பலரும் பொய் என கருத்து தெரிவித்தார்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் 540 கோடிக்கு மேல் இதுவரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் பஞ்சாயத்து மிகப் பெரிய பஞ்சாயத்து ஆக போய்க்கொண்டிருக்கிறது அவருடைய பேட்டியை ட்ரோல் செய்து பலரும் கமெண்ட் செய்து வந்தார்கள். இதனால் படக்குழு பரஸ்பெக்டிவ் காட்சியை வெளியிட்டு வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்த பிரபலங்களின் சம்பள விவரம்.! விசித்ராவிற்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்குபவர் கானா பாலாவா?

ஆனால் அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் இது அவசர அவசரமாக ரீ சூட் செய்யப்பட்ட காட்சி கௌதம் மேனனை இந்த காட்சியில் காணும் எனவும் கைதி ட்ரெஸ்ஸில் ஸ்ட்ரைப் இல்லை எனவும் கலாய்த்து தள்ளுகிறார்கள். பொதுவாக முடிஞ்சு போன விஷயத்தை அப்படியே விட்டாலே யாரும் பேச மாட்டார்கள் ஆனால் லியோ குழு ட்ரோல் செய்பவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஏதேதோ செஞ்சு ஆதாரம் தருகிறோம் என அடுத்தடுத்து கன்டண்டுகளை கொடுத்து வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு.

அந்த வகையில் ரஜினி ஜெயிலர்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா கழுகு கதை சொன்னதற்கு பிறகுதான் லியோ திரைப்படத்தில் கழுகு கிளைமாக்ஸ் சீன் வைக்கப்பட்டது எனவும் மன்சூர் அலிகான் சொல்லும் இந்த என்னோட பரஸ்பெக்டிவ் காட்சியை ரீசூட் செய்யப்பட்டு தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள் எனவும் கூறி வருகிறார்கள்.

கடற்கரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு ஹாட் ஃபோட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்.!

அது மட்டும் இல்லாமல் போக்கிரி படத்தில் மண்டை மேல் உள்ள கொண்டையை மறந்திட்டியே என கூறுவது போல் அந்த காட்சியில் மன்சூர் அலிகான் டிரஸ் மிஸ் மேட்ச் ஆகுது எனவும் கௌதம் மேனனை காணவில்லை எனவும் கலாய்த்து தள்ளுகிறார்கள் பொதுவாக சினிமாவில் பல டேக்குகள் எடுக்கப்படும் அதில் ஒரு டேக் தான் இது எனவும் மன்சூர் அலிகான் சிரிக்கும் காட்சியில் இன்னொரு பக்கத்தில் ஸ்ட்ரைப் இருக்கும் என விஜய் ரசிகர்கள் அதற்கு விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.

இந்து லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது அதில் விஜய் என்ன பேச போகிறார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் லியோ 2 அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில்  மன்சூர் அலிகான் காட்சியை வெளியிட்டு பங்கம் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.