சும்மாவே ஆடுவாங்க விஜய் ரசிகர்கள்.. இதுல வேற காலில் சலங்கையை கட்டி விட்ட சும்மாவா இருப்பாங்க… வெளியானது அதிரடி அப்டேட்!

Leo Movie : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த்,  மன்சூர் அலிகான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளது இன்னும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஏற்கனவே டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது இன்னும் ட்ரெய்லர் வைப் குறையாத இந்த நேரத்தில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட்டு படத்தை பரபரப்பாக வைத்துக் கொண்டு வருகிறது பட குழு. லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தூக்கி எறியப்பட்ட நிலைமை.. இன்று பிறந்தநாள் காணும் நிவின் பாலி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

அதுமட்டுமில்லாமல் பிரிமியர் காட்சி 18 ஆம் தேதி மாலை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள் பட குழு. இந்த நிலையில் படத்திலிருந்து 13  கட் எடுக்கப்பட்டுள்ளதாக சென்சார் தகவல் வெளியானது   சில காட்சிகள் ரத்தம் தெறிக்கும்படி இருந்ததாகவும் சில காட்சிகளில்  கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாலும் அதனை கட் செய்தும் மியூட் செய்தும் மொத்தம் 13 கட்டுகள் இருந்ததாக தகவல் வெளியானது.

படத்தில் கழுதைப்புலி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தது என்னதான் விலங்குகள் தொடர்பான காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெற்று இருந்தாலும் விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்குவது அவசியமாகும் அப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்திற்கு தற்பொழுது சான்றிதழ் கிடைத்துள்ளது இதனை ரசிகர்கள் கொண்டாடித்திருக்கிறார்கள்.

அரசனாக மிரட்டும் அஜித்.. இந்த கம்பீரம் யாருக்கு வரும்.!

அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியேற்றிக் கொண்டிருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.