நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. லியோ படம் உலகம் முழுவதும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் ஒரு படம் முடிந்த உடனேயே அடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் அந்த வகையில் வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “லியோ” படத்தில் நடித்தார் அந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து “தளபதி 68” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

படத்தின் முதல் கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெற்றிநடை  கண்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க அதிக ஆக்சன், எமோஷனல் கலந்து இருந்தது.

பாண்டியன் வீட்டு விசேஷத்தை கெடுக்க.. வீம்புக்கு பிறந்தநாள் கொண்டாடும் முத்துவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை.  தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் அள்ளியதால் கடந்த நவம்பர் 1ஆம் தேதி லியோ வெற்றி விழா..

சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இதில் விஜய், மன்சூர் அலிகான், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், அனிருத், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தயாரிப்பாளர் லலித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

அப்பாவுக்காக மட்டும் தான் உன்னை இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்.. மீனா மீது கோபத்தில் இருக்கும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசொட்

இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படம். இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கையில் லியோ திரைப்படம் சுமார் 555 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக சொல்லப்படுகிறது. வெகு விரைவிலேயே 600 கோடியை தொடும் என பலரும் கூறி வருகின்றனர்.