நம்ம பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும்.. ஆனா அடி சரவெடி – தமிழ் நாட்டில் லியோ படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வருபவர் தளபதி விஜய். இவர் வருடத்திற்கு குறைந்தது இரண்டு, மூன்று படங்களில் நடித்து விடுகிறார் அப்படி வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது.

படத்தில் விஜய் உடன் சேர்ந்து மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின்,  சாண்டி மாஸ்டர், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, மடோனா செபஸ்டியன் என பலர் நடித்தனர்.  படம் அதிக ஆக்சன் எமோஷனல் என இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

லியோவின் ஃப்ளாஷ் பேக் உண்மையா? பொய்யா? இருக்கும் ட்விஸ்ட் என்ன? விஜய் ரசிகர்களின் தியரி

இருந்தாலும் வசூலில் எந்த குறையும் இதுவரை வைக்கவே இல்லை முதல் நாளில் 145 கோடிக்கு மேல் அள்ளியது அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது இதுவரை மட்டுமே 545 கோடிகள் வசூல் அள்ளி உள்ளதாக தயாரிப்பு சைடுல இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் லியோ படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவலும் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இதுவரை லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 190 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக சொல்லப்படுகிறது.

பொண்டாட்டி பெயரில் இருக்கும் மொத்த சொத்தையும் ஆட்டையை போடும் அர்ஜுன்.! ராகினி இப்ப கூட உனக்கு புரியலையா.. தமிழும் சரஸ்வதியும்

வெகு விரைவிலேயே 200 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இன்று லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டாரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த வெற்றி விழாவிற்கு சுமார் 6000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.