கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் லியோ படம்.. தமிழகத்தில் மட்டும் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo Box Office : தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியானது.

லியோ படத்தின் கதை என்னவென்றால்..  பார்த்திபன் என்பவர் காஷ்மீர் பக்கத்தில் வாழ்ந்து வருகிறார் அவர் ஒரு கட்டத்தில் பிரபலம் அடைய தாஸ் குடும்பம் அவரை பார்த்து ஆச்சரியமடைகிறது காரணம் பார்ப்பதற்கு லியோ தாஸ் போலவே இருப்பதால் பார்த்திபன் பெயரில் லியோ தாஸ் அங்கு வாழ்கிறான் என நினைத்து அங்கு போகிறார்கள் அதன் பிறகு நடக்கும் ஆக்சன் எமோஷனல் தான் படத்தின் கதை..

விஜய், ரஜினி ஆட்டம் ஓவர்.. விக்ரமுக்கு பிறகு தரமான சம்பவம் செய்ய இருக்கும் உலகநாயகன்.! இனிமேதான ஆட்டமே இருக்கு.. KH234 ப்ரோமோ

படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் வசூலில் மட்டும் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை முதல் நாளில் மட்டுமே சுமார் 148.5 கோடி வசூல் செய்திருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது இதுவரை மட்டுமே லியோ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

குத்துன்னா இப்படி குத்தனும்.. கீர்த்தி சுரேஷுடன் ஆட்டம் போட்ட கௌதம் வாசுதேவ் மேனன்.. வைரலாகும் வீடியோ.!

தமிழகத்தில் பல இடங்களில் லியோ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே சுமார் 166 கோடி வசூலித்துள்ளது. வருகின்ற வாரத்தில் லியோ திரைப்படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்..