விஜய், ரஜினி ஆட்டம் ஓவர்.. விக்ரமுக்கு பிறகு தரமான சம்பவம் செய்ய இருக்கும் உலகநாயகன்.! இனிமேதான ஆட்டமே இருக்கு.. KH234 ப்ரோமோ

Kamal Haasan: சமீப காலங்களாக தொடர்ந்து வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அப்படி கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி அமைந்தது.

விக்ரம் திரைப்படத்தின் தாக்கத்தினால் கண்டிப்பாக இவர்களுடைய கூட்டணியும் நன்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல பில்டப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் ஆனால் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இதற்கு முக்கிய காரணம் லியோ படம் ரிலீஸ் இருக்கும் முன்பே பில்டப் கொடுத்தது தான் அந்த அளவிற்கு ஆஹா ஓஹோ என்று கொண்டாடி வந்த நிலையில் கடைசியில் விஜய் ரசிகர்களுக்கு பல்பாக அமைந்தது.

இந்த வாரம் வெளியேறும் 2 பேர்.. வைல்ட் கார்டு என்ட்ரியினால் பிக் பாஸ் அதிரடி.. காதல் ஜோடிக்கு வைத்த ஆப்பு.!

அப்படி முதல் வாரத்தில் ரூ.460 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டது. எனவே ரஜினியின் ஜெய்லர் பட வசூலை முறியடிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய வசூலில் கல்லா கட்டியது ஜெயிலர்.

இவ்வாறு ரஜினியை தொடர்ந்து விஜய்யின் லியோவை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது தான் ஓஞ்சு உள்ளனர். எனவே இவர்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் அளவிற்கு கமல் ஹாசன் அடுத்ததாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது கமல்ஹாசன் மணிரத்தினம் இணையும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்‌ஷத்ராவின் திருமண புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.!

நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினம் இருவரும் இணைந்துள்ளார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும், அன்பறிவு சகோதரர்கள் சண்டை பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் படக் குழு தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோ கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.