சிகரெட் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பா நீங்க.. லியோ சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு

Leo Success Meet: லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்ட நிலையில் இதற்கு ராஜேஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான லியோ கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

அப்படி இதுவரையிலும் மொத்தமாக 540 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் லியோ படத்தின் சக்சஸ் மீட் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி விஜய் தனது குட்டி ஸ்டோரியை கூறினார். மேலும் நான் ரெடி தான் படத்தின் சர்ச்சைகள் குறித்தும் பேசிய நிலையில் அதில், நான் ரெடி தான் பாடலின் சில வரிகள் பிரச்சனையை சந்தித்தனர்.

போலீஸ் மேல் காரை ஏத்திய மகா.. பதறி அடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்த சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இடுக்குல தீ பந்தம் என்ற வரி பிரச்சனையானது அது ஏன் சிகரெட் ஆகத்தான் இருக்க வேண்டுமா? பேனாவாக கூட இருக்கலாமே.. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் பள்ளி, கல்லூரி அருகில் கூட தான் மது கடை இருக்கிறது. அதற்காக தினமும் இரண்டு ரவுண்டு அடித்துவிட்டா பள்ளி கல்லூரிக்கு செல்கிறார்கள் என பேசி இருந்தார்.

இவ்வாறு இவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நான் ரெடி தான் பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்வரி பிரியா தன்னுடைய எல்ஸ் பக்கத்தில் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறியிருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டும் பாருங்கள் என்று கூறாமல் தளபதியாக பார்க்க சொல்கிறார்.

புடவையை சரிய விட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்த சமந்தா.! வைரல் ஹாட் கிளிக்..

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்று பேசுவது மிகவும் சிறுப்பிள்ளைத்தனமாக உள்ளது. நீங்கள் மட்டும் புகை மதுவை பயன்படுத்தவில்லை தன் பிள்ளை சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மறுப்பாதீர்கள்.

மக்களை ஆணையிட சொல்கிறீர்கள் நானும் மக்களில் ஒருவர் தான் இனி மது, புகை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள் நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றவரால் உங்களது இரண்டு ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை. மாணவர்கள் மத்தியில் மது, கஞ்சா, புகை மற்றும் பல போதை பொருட்கள் புழக்கத்தினை கண்ணெதிரே  காண்பிக்க தயாராக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.